சென்னையில் உள்ள பஞ்சாப் அசோசியேஷன் சார்பில் கில் நினைவு விளையாட்டு மற்றும் பி.என். தவான் கலாச்சார பண்பாட்டு விழா ஆக. 24 அன்று நடைபெற்றது.
எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த விழாவில் மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை அதிரடிப்படை கூடுதல் காவல்துறை தலைவர் சந்தீப்ராய் ரத்தோர் ஏற்றார்.  பஞ்சாப் அசோசியேஷன் கீழ் செயல்படும் அனைத்து பள்ளிகளில் இருந்தும் மாணவ மாணவியர் இதில் கலந்து கொண்டனர்.  விளையாட்டுப்போட்டிகளும் கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு  ஜிஎஸ்டி உதவி ஆணையரும் சர்வதேச தடகள வீரருமான  ஆர். நடராஜன் பரிசுகளையும்  சான்றிதழ்களையும் வழங்கினார். பஞ்சாப் அசோசியேஷன் துணைத்தலைவர் விஜய், பொதுச் செயலாளர் ரமேஷ் லம்பா உள்பட பலர் இதில் கலந்துகொண்டனர்.
படம் ஸ்போர்ட்ஸ்

Leave A Reply

%d bloggers like this: