கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் படித்த உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோத செயல்பாடுகளை மக்கள் மத்தியில் விளக்கும் வகையில் நாடு தழுவிய அளவில் ஆகஸ்ட் 16 முதல் 25 வரை மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற்று வருகின்றது. இதன் ஒருபகுதியாக புதனன்று (ஆக 23) புதுப்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது.

கட்சியின் கிளைச் செயலாளர் டி.ஏகாம்பரம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கல்பாக்கம் அணுமின் நிலைய வேலைவாய்ப்பில் படித்த உள்ளூர் இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும், விவசாயிகளின் கடன்களை உடனடியாக தள்ளுபடி செய்யவேண்டும்,  நீட்தேர்வில் தமிழகத்திற்கு முழுவிலக்கு வழங்க வேண்டும், டெங்கு காய்ச்சலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மக்கள் பிரச்சனைகளுக்காக போராடுபவர்கள் மீது  பொய் வழக்குப் போடும் போக்கை கைவிடவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தக் கூட்டம் நடைபெற்றது.

கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன், திருப்போரூர் திருக்கழுக்குன்றம் பகுதிச் செயலாளர் எம்.செல்வம், பகுதிக்குழு உறுப்பினர் பகத்சிங்தாஸ் உள்ளிட்ட பலர் பேசினர். பெரியார் நகர் நந்தா நன்றி கூறினார்.

Leave A Reply

%d bloggers like this: