ஆதார் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு நடிகர் கமல்ஹாசன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

தனிநபர் ரகசியம் என்பது அடிப்படை உரிமையே என்று ஆதார் தொடர்பான வழக்கில்  9 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு ஒரு மித்த கருத்தை கொண்டு  தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் தனிமனித சுதந்திரம் என்பது அனைவருக்கும் முக்கியமானது என நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். தனிமனித உரிமை என்பது ரகசிய காப்பு உரிமைகளில் ஒன்றே என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. அரசியல் சட்டத்தின் 21-வது பிரிவின் படி தனிநபர் ரகசியம் காப்பது அவசியமாகும் என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால் ஆதார் பயன்பாட்டு கொள்கையில் மாற்றம் வரலாம் என்று கருதப்படுகிறது.

உச்சநீதி மன்றத்தின் இந்த தீர்ப்புக்கு நடிகர் கமல்ஹசன் வரவேற்பு தெரிவித்துள்ளார். ஆதார் வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு மக்கள் நன்றி கூற வேண்டும் என்று கமல்ஹாசன் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். நன்றி தெரிவிப்பது புதிய இந்தியாவை உருவாக்கும் தருணமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

 

 

Leave A Reply