சென்னை,
நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவக்கலந்தாய்வை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மாணவர் சங்கத்தினர்  ஓமந்தூரார் தோட்டத்தில் மருத்துவ கலந்தாய்வு நடைபெறும் இடத்தின் முன்பு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். நீட் தேர்வு மாநிலப்பாடத்தில் படித்த மாணவர்களின் உரிமையை கேள்விக்குறியாக்கி உள்ளது. கிராமப்புற மாணவர்களின் மருத்துவபடிப்பு கனவை தகர்க்கும் வகையில் உள்ளது. இதனால் நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவக்கலந்தாய்வை நடத்தக்கூடாது என்ற கோரிக்கையை முன்வைத்து இந்திய மாணவர் சங்கத்தினர் கலந்தாய்வு நடந்து வரும் ஓமந்தூரார் தோட்டம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக இழுத்துக் சென்று கைது செய்யும் நடவடிக்கையில்  ஈடுபட்டனர் இதனால் மாணவர்களுக்கும் போலீசாருக்கும் இடையில் சலசப்பு ஏற்பட்டது. இந்த போராட்டத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை காவல் துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.

Leave A Reply

%d bloggers like this: