புதுதில்லி, ஆக.
கட்டண விகிதங்களைக் குறைக்க வேண்டிவந்ததால் ஏற்பட்டுள்ள இழப்பை ஈடு செய்ய அரசு சலுகைகள் வழங்க வேண்டும் என்று ஏர்டெல், வோடபோன், ஐடியா உள்ளிட்ட நிறுவனங்கள் அரசைக் கேட்டு வருகின்றன. தொலைத் தொடர்பு நிறுவனங்கள் வைத்துள்ள ரூ.5 லட்சம் கோடி கடனில்40 சதவீதம்இம்மூன்று நிறுவனங்களின் கடன் ஆகும்.
இக்கடன்களுக்கான வட்டி விகிதங்களைக்குறைக்கவேண்டும், அலைக்கற்றைக்கானகட்டணம்செலுத்தும் காலத்தை 10 ஆண்டுகளிலிருந்து 16 ஆண்டுகளாகநீட்டிக்க வேண்டுமென்பனஉள்ளிட்ட தொலைத்தொடர்புநிறுவனங்களின்கோரிக்கைகளைப் பரிசீலிக்கஅமைச்சகங்களுக்கு இடையேயான குழுஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு தனது அறிக்கையை ஆகஸ்ட் 27அன்று இறுதி செய்து, செப்டம்பர் 1 அன்றுதொலைத்தொடர்பு ஆணையத்திடம் வழங்கும்என்று கூறப்படுகிறது.
தொலைத்தொடர்பு நிறுவனங்களின் மொத்த வருமானத்தில் சுமார்8சதவீதம் ஆக இருக்கும் உரிமக் கட்டணத்தை3சதவீதம் ஆகவும், 3சதவீதமாக இருக்கும்அலைக்கற்றைப் பயன்பாட்டுக் கட்டணத்தைஒரு சதவீதமாகவும் குறைக்க வேண்டும் என்றகோரிக்கையையும் இந்நிறுவனங்கள் வைத்துள்ளன. இதேபோன்ற காரணங்களுடன், இதேபோன்ற கோரிக்கைகளை எழுப்பிய விவசாயிகளை, போராடினாலும் சந்திக்கக்கூடத் தயாராக இல்லாத அரசுதான், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அவசரமாகக் குழு அமைத்து, அறிக்கை தர தேதியும் நிர்ணயிக்கிறது என்பதுதான் கவனிக்க வேண்டிய செய்தி!
(-23.8.2017 எகனாமிக் டைம்ஸ்)

Leave A Reply

%d bloggers like this: