விநாயகர் சதுர்த்தி வருகிறது. வீட்டுக்குள் அமைதியாக நடந்துவந்த ஒரு பண்டிகையை வீதிக்கு கொண்டுவந்து பதட்டமானதாக மாற்றி விட்டார்கள் ஆர்எஸ்எஸ் பரிவாரத்தினர். பிராமணிய மதப் புராணப்படியே விநாயகர் அமைதியானவர். கத்தியைப் பயன்படுத்தாமல் புத்தியைப் பயன்படுத்தியவர். கையில் ஆயுதம் தாங்காமல் எழுதுகோலை தாங்கியவர். அப்படிப்பட்டவருக்கு ஆர்எஸ்எஸ் அரைடிரவுசரை மாட்டிவிட்டு, கையில் துப்பாக்கியைக் கொடுத்து ஊர்வலம் விடுகிறார்கள்! ஆம், அங்கேவருவது புராண விநாயகர் அல்ல, ஆர்எஸ்எஸ் விநாயகர். அதில் சிறுபான்மை மதத்தவருக்கு எதிராக கோஷங்களைப் போடுகிறார்கள். பிரச்னை பிள்ளையாரிடமும் இல்லை, அவரை வீடுகளில் கும்பிடும் பக்தர்களிடமும் இல்லை. பிரச்னை அவரை வைத்து மதக் கலவரத்தை தூண்டப் பார்க்கும் இந்துமுன்னணி வகையறாக்களிடம் தான். இந்தஆண்டும் காவல்துறை எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தமிழகத்தில் நடப்பதும் தங்களது ஆட்சியே எனக் கூறிக்கொண்டு அவர்கள் சிறுபான்மை மதத்தவரை வம்புக்கு இழுக்கக் கூடும். சட்டம் ஒழுங்கை காத்து அமைதியைப் பராமரிக்க
வேண்டியது மாநில அரசின் கடமை. இந்த ஆட்சியாளர்கள் போற்றும் அம்மா மதக் கலவரங்களைத் தடுப்பதில் குறியாகஇருந்தார் என்பதையாவது மனதில் கொண்டு  செயல்பட வேண்டும். இல்லையெனில் மக்கள் இவர்களை மன்னிக்க மாட்டார்கள்.

Ramalingam Kathiresan

Leave A Reply

%d bloggers like this: