சண்டிகர்,
அரியானாவில் அடுத்த 72 மணி நேரத்திற்கு மொபைல் இண்டர் நெட் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அரியானா மாநிலத்தில் தேரா சச்சா சவுதா அமைப்புத் தலைவர் குர் மித் ராதம் ரஹீம் சிங் தனது ஆசிரமத்தில் வைத்து 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த வழக்கில் 15 ஆண்டுகளுக்கு பின் நாளை தீர்ப்பு வர இருக்கிறது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இன்றம் நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது.  முக்கிய ஊர்களுக்கு  செல்லும் அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டிருக்கிறது. பொது இடங்களில் பட்டாசுகளை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து வாகனங்களையும் சோதனையிட உத்தரவிட்டுள்ளது. மேலும் அடுத்த 72 மணி நேரத்திற்கு மொபைல் இண்டர் நெட் சேவை ரத்து செய்யப்படுவதாக அம்மாநில உள்துறை செயலாளர் ராம் நிவாஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் பஞ்சாம் மற்றும் அரியானா மாநிலத்தில் பாதுகாப்புக்கு  கூடுதல் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். விவிஐபி செக்யூரிட்டி கமாண்டோக்களும் பொது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது

Leave A Reply

%d bloggers like this: