நேற்றும் உத்திரப்பிரதேசத்தில் ஒரு ரெயில் தடம் புரண்டு இருக்கிறது. பலர் படுகாயமடைந்து இருக்கின்றனர். உயிர்ச்சேதம் தெரியவில்லை. நான்கு நாட்களுக்கு முன்பும் இது போல் விபத்து நடந்தது. 25க்கும் மேற்பட்டோர் இறந்தனர்.

‘புல்லட் ரெயில் கொண்டு வரப் போகிறேன்’, ‘ரெயில்வேத் துறை மிகச் சிறப்பாக பணியாற்றுகிறது’ என முழக்கமிட்ட மோடியின் ஆட்சிக்காலத்தில்தான் தொடர்ந்து ரெயில் விபத்துகள் நடந்து கொண்டு இருக்கின்றன.

மக்களை பிளவுபடுத்துவதிலும், மக்களை வதைப்பதிலும், அரசியல் கட்சிகளை சிதைப்பதிலும் 24X7 சிந்திக்கிற, செயல்படுகிற அரசுக்கு, மக்கள் அதிகமாய் பயணம் செய்கிற துறையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை கவனிக்க நேரமில்லை போலும்.

யோகி முதலமைச்சராக வந்த பிறகு, அவர் ஆட்சிக்கு களங்கம் ஏற்படுத்துவதற்காக தொடர் சதிகள் நடப்பதாக சங்கிகள் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்திருக்கின்றனர். பத்திரிகை செய்திக்கு எதிரொலிக்கும் கருத்துக்களில் அவர்கள் இதனை பரப்புவது தெரிகிறது.

அதில் ஒருவர் வருத்தத்தோடு ”தேர்தலில் ஜெயித்து ஆட்சியை பிடிப்பது பிஜேபிக்கு தெரிகிறது. ஆனால் ஆட்சியை எப்படி நடத்துவது என்று தெரியவில்லை’ என புலம்பி இருக்கிறார். பாவம், அவருக்கு ஒரு போதனை கிடைத்திருக்கிறது.

Leave A Reply