முத்தலாக் பற்றிய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வந்துள்ளது. அதை முஸ்லிம்சமூகம்
விவாதிக்கத் துவங்கியுள்ளது. ஒவ்வொரு மதம் சார்ந்த தனிநபர் சட்டங்களும்
பெண்ணுரிமை உள்ளிட்ட சமூக சீர்திருத்த நோக்கில் மறு பரிசீலனைக்கு உட்படுத்
தப்படுவது அவசியமாகும். அது நடக்கட்டும்.
ஆனால் முத்தலாக் விவகாரம் பற்றிப் பேச பிரதமர் மோடிக்கு தகுதி இல்லை. அவரது தொகுதியாகிய வாரணாசியில் ஆயிரக்கணக்கான இளம் இந்து விதவைகள் மறுமண உரிமையின்றி அலைகிறார்கள். மதுராவிலும் இதே நிலைதான். ஏன் மோடிகூட ஒரு தலாக்கும் சொல்லாமல் ஒரு பெண்மணியை “வாழாவெட்டி” ஆக்கியிருக்கிறார்.
இந்து பெண்களின் மறு மண உரிமை நடைமுறையில் கானல்நீராகவே உள்ளது. அப்படித்தான் அவர்களது சொத்துரிமை, கார்டியன் உரிமை, தத்து உரிமை உள்ளிட்ட பல தனிநபர் உரிமைகளின் நிலையும் உள்ளது. இதுபற்றி பிரதமர் என்ற முறையில் மோடி பேசியதுண்டா? 

முத்தலாக் பற்றிமட்டும் அவர் பேசுவது பெண்ணுரிமைக்காக அல்ல, மதபிளவுவாத
அரசியலுக்காக. 1940 களில் இந்து திருமணச் சட்டத்தில் பெண்ணுரிமை நோக்கில்
அண்ணல் அம்பேத்கர் திருத்தங்களை முன் மொழிந்த போது அவரை கடுமையாக
எதிர்த்து அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வைத்த கூட்டம் மோடியின்
ஆர்எஸ்எஸ் பரவாரம் எனும் சரித்திர உண்மையை மக்கள் மறந்துவிடக் கூடாது.
இப்போதும்கூட சட்டமன்றங்கள் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33% இட
ஒதுக்கீடு பற்றி அவர்கள் பேசுவதில்லை என்பதையும் கவனியுங்கள்.
  • Ramalingam Kathiresan

Leave A Reply

%d bloggers like this: