கடந்த 20 ஆண்டுகளாக மின்சாரத்தில் இயங்கும் ஸ்கூட்டரை ஆய்வு செய்து வரும் போதிலும் அதன் உற்பத்தி செலவு அதிகமாக இருப்பதாக ஹோண்டா மோட்டார் சைக்கிள் இந்திய நிறுவன தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி  மினோரு கேதோ தெரிவித்துள்ளார்.
சென்னையில் தனது நிறுவனத்தின் கிளிக் என்ற ஸ்கூட்டரை அறிமுகம் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதலில் இந்த மின்சார ஸ்கூட்டர் ஜப்பானில் அறிமுகம் செய்யப்படும் என்றும் பின்னர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார். 2020 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் அனைத்து இருசக்கர வாகனங்களும் சுற்றுச்சுழலுக்கு ஏற்றவகையில் பேட்டரியில் இயங்கும் வாகனங்களாக மாற்ற மத்திய அரசு அறிவித்துள்ளதால் அதற்கு ஏற்ப எங்களது திட்டமிடலையும் வைத்துள்ளோம் என்றும் அவர் மேலும் கூறினார்.
மிகவும் முக்கியத்துவம் பெற்ற தென்னிந்தியச் சந்தையில் தனது முதன்மை இடத்தை மேலும் வலுவுள்ளதாக்கும் வகையில் புதிதாக 110சிசி ஆற்றல் கொண்ட ‘க்ளிக்’ ஸ்கூட்டரை தமிழ்நாட்டில் அறிமுகம் செய்துள்ளதாகவும் இந்த  வாகனம் அதிகபட்ச பயன்பாடுகளுடன், கூடுதலாக வசதிகளுடன் அமைந்திருப்பதாகவும் அவர் கூறினார். பெண்கள் இன்று அதிகளவில் இருசக்கர வாகனத்தை பயன்படுத்த துவங்கியிருப்பதால் அவர்கள் வசதியாக ஓட்ட புதிய வாகனங்களை அறிமுகம் செய்து வருவதாகவும் அதில் ஒன்றுதான் கிளிக் ஸ்கூட்டர் என்றும் நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் பிரிவின் மூத்த துணைத்தலைவர்  யத்விந்தர் சிங் குலேரியா  கூறினார். கிளிக் ஸ்கூட்டர் விலை தமிழகத்தில் வரிகள் உள்பட ரூ.45ஆயிரத்தின் 409 ஆகும்.

Leave A Reply