தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் அகில இந்திய அமைப்பான ஊனமுற்றோர் உரிமைகளுக்கான தேசிய மேடையின் அகில இந்திய மாநாடு செப்-16,17 தேதிகளில் விருதுநகரில் நடைபெறுகிறது.

மாநாட்டை உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கோபால் கவுடா துவக்கி வைக்கிறார்.  அகில இந்தியத் தலைவர் பா.ஜான்சிராணி, பொதுச்செயலாளர் காந்தி கங்குலி, தமிழ்நாடு பொதுச்செயலாளர் எஸ்,நம்புராஜன் உள்ளிட்டு நாடு முழுவதும் இருந்து 350-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி தலைவர்கள், ஆர்வலர்கள், மாற்றுத்திறனாளி குறித்த ஆராய்ச்சி படிப்புகளை மேற்கொள்வோர் இந்த மாநாட்டில் கலந்துகொள்கின்றனர்.    செப்-17 அன்று விருதுநகர் தேசபந்து மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட மாற்றுத்திறனாளிகள் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் 5000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொள்ள உள்ளனர்.

ரத்ததான முகாம்கள்
மாற்றுத்திறனாளிகள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடுகிற அதே வேளையில், அவர்களிடம் சேவை மனப்பான்மையை ஊக்குவிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் 50-க்கும் மேற்பட்ட மையங்களில் முகாம்கள் நடத்தி, 5000-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் ரத்ததானம் வழங்கிட உள்ளனர் என்று தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநிலத் தலைவர் பா.ஜான்சிராணி, துணைத் தலைவர் தே.லட்சுமணன், செயலாளர் எஸ்.நம்புராஜன் ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: