ஓஹியோனா,
அமெரிக்காவின் ஒஹியோனா மாகாணத்தில் உள்ள ஸ்டீவ்பின்விலி நகர் நீதிமன்றத்தில் நீதிபதியும், கைதி ஒருவரும் நேருக்கு நேர் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டுள்ளர். இதில் கைது சுட்டுக் கொல்லப்பட்டார். படுகாயமடைந்த நீதிபதி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அமெரிக்காவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

நெதனில் ரிச்மென்ட் என்ற கைதியை நீதிமன்றத்திற்கு காவலர்கள் விசாரணைக்காக அழைத்து வந்திருக்கின்றனர். இந்த கைதியிடம் நீதிபதி விசாரணை நடத்தியிருக்கிறார். பின்னர் விசாரணை முடிந்து கைதியை காவல்துறையினர் நீதிமன்றத்திற்கு வெளியே அழைத்து வந்திருக்கின்றனர்.

அப்போது கைதியை விசாரித்த நீதிபதி ஜோசப் புரூஸிஸ் என்பவரும் வெளியே வந்துள்ளார். அப்போது திடீரென கைதி துப்பாக்கி ஒன்றை எடுத்து நீதிபதி நோக்கி சரமாரியாக சுட்டிருக்கிறார். இதில் சுதாரித்துக்கொண்ட நீதிபதி தானும் பதிலுக்கு துப்பாக்கியை எடுத்து கைதியை நோக்கி சுட்டிருக்கிறார். இதில் கைதி குண்டடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அதே நேரத்தில் கைதி சுட்டத்தில் படுகாயமடைந்த நீதிபதியை உடனே ஹெலிகாப்டரில் அழைத்து சென்று சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் தற்போது நீதிபதி அபாய கட்டத்தை தாண்டியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave A Reply

%d bloggers like this: