சென்னை,
நீட் தேர்வு விவகாரத்தில் தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு தமிழக அரசு அநீதி இழைத்து விட்டது என்று நீதிபதி குற்றம் சாட்டியுள்ளார்.
நீட் விவகாரத்தில் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த மாணவி கிருத்திகா தன்னையும் கலந்தாய்வுக்கு அனுமதிக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன் நீட் விவகாரத்தில் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு அரசு அநீதி இழைத்து விட்டது. நீட் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள தரவரிசைப்பட்டியல் இடம் பிடித்த மாநில பாடத்தில் படித்தவர்களின் பட்டியலும், சிபிஎஸ்இ, பாடத்திட்டத்தில் படித்தவர்களின் பட்டியலையும் பிற்பகல் 2.15க்குள் தமிழக அரசு உயர் நீதி மன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: