நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக் கோரும் வழக்கில் மத்திய அரசு ஒரு மாநிலத்திற்கு விலக்கு அளிக்க முடியாது எனக் கூறியதைக் கண்டித்தும், நிரந்தர விலக்கு அளிக்கக் கோரியும் வடசென்னை மாவட்ட இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் சென்னை பூக்கடை பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் விஜி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநிலத் தலைவர் வீ.மாரியப்பன், மாவட்டச் செயலாளர் இசக்கி, வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் சரவண தமிழன், செயலாளர் கார்த்திக் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply