நீட் தேர்வில் மாநிலப்பாடத்திட்டதில் படித்த மாணவர்களுக்கு அரசு அநீதி இழைத்துள்ளது.
நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு பெறுவோம் என்று கடைசி வரை உறுதியளித்த தமிழக அரசு தற்போது நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை என்று கூறி மாநிலக்கல்வித்திட்டத்தில் பயின்ற மாணவர்களுக்கு அநீதி இழைத்துள்ளது.
மாநில பாடத்திட்டத்தில் படித்து நீட் தேர்வு எழுதிய 83, 359 பேரில், 2, 224 பேருக்கு மட்டுமே மருத்துவ படிப்பிற்கான இடங்கள் கிடைத்திருக்கிறது. இதிலும் 403 பேர் மட்டுமே கடந்தாண்டு 12ம் வகுப்பு படித்தவர்கள். மற்ற மாணவர்கள் தனியார் பயிற்சி மையங்களில் பல லட்சங்களை கொட்டி கொடுத்து படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் சிபிஎஸ்சி உள்ளிட்ட மற்ற பாடப்பிரிவுகளில் படித்து நீட் தேர்வு எழுதிய 4, 675 பேரில் ஆயிரத்து 310 பேருக்கு மருத்துவ படிப்பிற்கான இடங்கள் கிடைத்திருக்கிறது.

Leave A Reply

%d bloggers like this: