ஸ்ரீநகர்,
ஜம்மு-காஷ்மீரில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வராததால் தினமும் 2 மணி நேரம் பள்ளி வாசலில் ஆரம்பப் பள்ளி மாணவர்கள் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
உதம்பூர் மாவட்டம் நானாசோ பகுதியில் உள்ள ஆரம்பப் பள்ளியில் ஆசிரியர்கள் வராத காரணத்தால் பள்ளி வாசலில் குழந்தைகள் தினமும் 2 மணி நேரம் மாணவர்கள் காத்துக் கொண்டிருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. ஆகஸ்டு 15 ஆம் தேதி முதல் எந்த ஆசிரியர்களும் பள்ளிக்கு வரவில்லை. அருகில் வேறு எந்த பள்ளியும் இல்லை. இதனால் அரசு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave A Reply