திருவில்லிபுத்தூர்;
திருவில்லிபுத்தூர் அருகே சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் இருந்து 2 சிறுவர்கள் தப்பி ஓடிவிட்டதாக காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.

திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள மல்லிபுத்தூரில் அரசு குழந்தைகள் இல்லம் உள்ளது. வத்தலகுண்டு, கெங்குவார்பட்டி-ஜி.மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த செல்வராஜ் மகன் பிரதாப் (13) , திண்டுக்கல் குழந்தைகள் நலக் குழு ஆணைப்படி 18.6.15-ம் தேதி முதல் தங்கி 8-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.அருப்புக்கோட்டை, சத்யவாணிமுத்து நகரைச் சேர்ந்த கதிரேசன் மகன் விஷ்ணு (13) , குழந்தைகள் நலக் குழு ஆணைப்படி 18.6.17-ம் தேதி முதல்  தங்கி 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

இவர்கள் இருவரும் ஜூலை 31ஆம் தேதி மாலை 5 மணியளவில் இல்லத்தைவிட்டு வெளியேறியுள்ளனர்.

தகவலறிந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். அவர்களை கண்டு பிடிக்க இயலாததையடுத்து, குழந்தைகள் இல்லக் கண்காணிப்பாளர் ஜெய்சங்கர் (50) மல்லி காவல் நிலையத்தில் நேற்று புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து இருவரையும் தேடி வருகிறார்கள்.

Leave A Reply

%d bloggers like this: