திருச்செங்கோடு, ஆக. 23- மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் மாதம் ஒரு முறை சிறுபான்மையின மக்களுக்கான குறைதீர்ப்பு கூட்டம் நடத்திட வேண்டும் என வலியுறுத்தி திருச்செங்கோட்டில் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறுபான்மை மக்களுக்கு எதிராக அதிகரித்து வரும் வன்முறைகளை அரசு தடுத்து நிறுத்த வேண்டும். சிறுபான்மையின மாணவ, மாணவியருக்கு கல்வி கடன்எளிதாக வழங்க நடவடிக்கை எடுத்திட வேண்டும். புத்த மதத்திற்கு சான்றிதழ் வழங்கிடுக. திருச்செங்கோடு, குமாரபாளையம் பகுதிகளில் தேவாலயம், பள்ளிவாசல் கட்டும் பணிக்கு இடையூறு செய்யும் சமுக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்செங்கோட்டில் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்போராட்டத்திற்கு ஜ.ராயப்பன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் ஏ.அசன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் எஸ்.கந்தசாமி தர்ணா போராட்டத்தை துவக்கி வைத்தார். மாநில பொதுச்செயலாளர் பி.மாரிமுத்து சிறப்புரை ஆற்றினார். இப்போராட்டத்தில் ஒன்றிய செயலாளர் வேலாயுதம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply