டமாகஸ், அக்.
சிரியாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்துவதாக கூறி அமெரிக்கா நடத்திய வான்வெளி தாக்குதலில் 19 குழந்தைகளுடன் 42 பேர் பலியாகியுள்ளனர்.
ஈராக், சிரியா உள்ளிட்ட நாடுகளில் ஐஎஸ் பயங்கரவாதிகள் சில பகுதிகளை கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து வருகின்றனர்.

இந்த தீவிரவாதிகளை ஒழிக்க அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் தலையிட்டு நடவடிக்கை எடுத்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக அமெரிக்கா சிரியா பகுதியில் முகாமிட்டுள்ள ஐ.எஸ் பயங்கரவாதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. ஆனால் அதற்குள்ளும் ஒரு சூட்சுமமாக ஏற்கனவே சிரியாவில் பஷார் அல் அசாத்திற்கு எதிராக அமெரிக்க ஆதரவுடன் களமிறங்கி உள்நாட்டு போரில் ஈடுபட்டு வரும் ஆயுதக்குழுவினரை, தாக்குதல் நடத்திய இடத்தை கைப்பற்றி கொள்வதற்கான ஏற்பாட்டையும் செய்து வருகிறது.

இது சிரியா அரசு தரப்பினருக்கு தொடர்ந்து மேலும் சிக்கலை ஏற்படுத்துகிறது. இதற்கு ரஷ்யா கடும் கண்டனம் தெரிவிப்பதுடன், அமெரிக்கா ஆதரவு ஆயுதக்குழுக்களுக்கு எதிராக ரஷ்யா சிரியா ராணுவத்திற்கு ஆதரவாக நிற்கிறது.
இந்நிலையில் சிரியாவில் ஐ.எஸ். அமைப்பினரின் ஆதிக்கம் நிறைந்த ராக்கா பகுதியில் அமெரிக்கா தலைமையிலான படையினர் வான்வழி தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.இந்த தாக்குதலில் 19 குழந்தைகள் மற்றும் 12 பெண்கள் உட்பட 42 பேர் பலியாகியுள்ளனர்.அந்நகரில் 2வது நாளாக தாக்குதல்கள் நடந்து வரும் நிலையில் அமெரிக்க ஆதரவு சிரியா அரசிற்கெதிரான ஆயுதக்குழுவினர் 50 சதவீத பகுதிகளை தங்கள் வசம் கைப்பற்றியிருப்பதாக தெரிவித்திருக்கின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: