பெல்காவி,

கர்நாடக மாநிலம் பெல்காவியில் நடைபெற்ற லிங்காயத்து பிரவு மக்களின் பிரமாணட் பேரணியில்  ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு எதிராக கோஷங்களை ஒரு சேர எழுப்பி தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர்.

கார்நாடகாவில் வாழும் லிங்காயத்துக்கள் இந்து மதத்தின் ஒரு பிரிவை சேர்ந்தவர்கள்தான் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன்பகவத் தெரிவித்ததற்கு கடும் எதிர்ப்பு எழுந்து வருகிறது. அதன் ஒருபகுதியாக லிங்காயத்து இன மக்கள் நடத்திய பிரமாணட பேரணியில் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவிற்கு எதிராக முழக்கங்கள் எழுப்பட்டது.

லிங்காயத்துக்கள் தாங்கள் இந்து மதத்தினர் அல்லர் எனவும் தங்களை தனி மதத்தவர் என அறிவிக்க வேண்டும் என  போராடி வருகின்றனர். இதனை கர்நாடக முதல்வர்  சித்தராமையா லிங்காயத்துகளை மதம் தனியானது என அறிவித்துள்ளார். இந்த நடவடிக்கை பாஜகவிற்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியிருக்கிறது.  இதன் காரணமாக பா ஜ க வுக்கு ஆதரவாக இருக்கும் லிங்காயத்துக்களை தன் பக்கம் இழுக்கவே இந்த பிரித்தாளும் சூழ்ச்சியை முதல்வர் நிகழ்த்துவதாக மாநில பா ஜ க தலைவர் எடியூரப்பா கூறி வந்தார்.

ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத்  லிங்காயத்துகள் இந்து மதத்தின் ஒரு பிரிவினரே. இது இந்து மதத்தின் உட் பிரச்சினை எனவும்  எனவும் கூறினார். இதற்கு லிங்காயத்துகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில்  நேற்று (செவ்வாயன்று ) பெல்காவியில்  லிங்காயத்துக்கள் மாபெரும் பேரணி ஒன்றை நடத்தினர்.  அதில் பல்லாயிரக்கணக்கான லிங்காயத்துக்கள் கர்னாடகா, ஆந்திரா, கேரளா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலிருந்து கலந்துக் கொண்டனர்.  இந்தப் பிரிவினரின் மடத்தை சேர்ந்த பல மடாதிபதிகளும் இதில் கலந்துக் கொண்டனர்.  பேரணியில் மோகன் பாகவத் கூறிய கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.  இத்தனை நாட்களாக தாங்கள் இந்து மதத்தின் ஒரு பிரிவாக இருந்ததால் இந்து மதம் தங்களுக்கு ஏன் எந்த ஒரு நன்மையும் செய்யவில்லை என கேள்வி எழுப்பினர்.

மடாதிபதிகளில் ஒருவரான சித்தராம சாமி கூறுகையிருப்பதாவது, “இந்து மதம் லிங்காயத்திசம் ஆகியவைகளுக்கு அடிப்படையிலேயே வேறுபாடு உண்டு.  எங்கள் மதம், ஜாதி, வகுப்பு, மற்றும் பாலினத்தின் பெயரால் யாரையும் தாழ்த்தாது.  அனைவரும் சமமே.  எங்களின் மதம் பல கடவுள்களை வணங்குவதை ஊக்குவிப்பது இல்லை.  இந்துமதத்தில் நாம் செய்யும் பாவ புண்ணியங்களின் பலன் அடுத்த ஜென்மத்தில் நம்மை வந்து சேரும் என்பதற்கு மாறாக எங்கள் மதத்தில் நாம் செய்யும் பாவ புண்ணியங்களுக்கான பலன்கள் நமக்கு இந்த பிறவியிலேயே கிடைத்து விடும் என சொல்லப்பட்டுள்ளது.” என தெரிவித்தார்.

இதற்கு முன்பு இதே போல ஒரு மாபெரும் பேரணி ஜூலை மாதத்தில் லிங்காயத்துகளால் பிதார் என்னும் இடத்தில் நடைபெற்றது.  தற்போது ஆளும் காங்கிரஸ் கட்சியினரின் ஆதரவும் கிடைத்திருப்பது லிங்காயத்த்துக்களுக்கு மேலும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.

Leave A Reply