சென்னை,
மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.
நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க முடியாது என்று நேற்று உச்ச நீதி மன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து இன்று மருத்துவ மாணவர்களுக்கான தரவரிசை பட்டியலை சுகாதாரத்துறை செயலர் ராதா கிருஷ்ணன் வெளியிட்டார். இதில் 656 மதிப்பெண்கள் பெற்று ஒசூரைச் சேர்ந்த மாணவர் சந்தோஷ் முதலிடம் பிடித்துள்ளார்.. கோவையைச் சேர்ந்த முகேஷ் கண்ணா 655 மதிப்பெண்களை பெற்று இரண்டாம் இடம் பெற்றுள்ளார். 651 மதிப்பெண்களை பெற்று திருச்சியைச் சேர்ந்த சையது ஹபீஸ் என்ற மாணவர் மூன்றாம் இடம் பிடித்துள்ளார். கலந்தாய்வுக்காக மாணவர்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் தகவல்கள் அனுப்பப்படும். இணையதளத்தில் தரவரிசைப்பட்டியலின் விபரங்களை பார்த்தும் மாணவர்கள் சென்னை வரலாம் என்று ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: