திருவொற்றியூரை அடுத்துள்ள எண்ணூரில் கடந்த சில நாட்களாக கடல் சீற்றத்ததுடன் காணப்படுகிறது. சீறிப்பாயும் அலைகள் தடுப்புகளைத் தாண்டி  குடியிருப்பு வீடுகளைச் சேதப்படுத்தியது.

திருவொற்றியூர் எண்ணூரில், தாழங்குப்பம், நெட்டுக் கொப்பம், முகத்துவாரக்குப்பம், பர்மா நகர், பாரதியார் நகர், ஓண்டிகுப்பம் என 22 மீனவ கிரமங்களில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வசித்து வருகின்றனர்.

மூன்று நாட்களாக, கடல் சீற்றம் அதிகமாக இருக்கிறது. அமாவாசை தினத்தன்று கடல் அலை சீற்றம், வழக்கத்தைவிட அதிகமாகக் காணப்படும். நேற்று முன்தினம், அமாவாசை தினத்தில் இருந்து நேற்று மாலை வரை, எண்ணூர் கடல் அலை, கற்களாலான தடுப்புச் சுவரைத் தாண்டி அதிக சீற்றத்துடன் குடியிருப்புகளில் மோதுகிறது. இதனால் சின்னகுப்பம் மீன கிராமத்தில் எஸ்.தணிகாசலம் என்பவரின் வீட்டின் ஓடு கடல் காற்றால் சேதமடைந்தது. அதே போல ஆர்.அருண் என்பவரின் வீடு கடல் தண்ணீர் வந்து சேதமடைந்தது. அலை சீற்றம் காரணமாக கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.பலர் வீடுகளைத் தற்காலிகமாக காலி செய்துவிட்டு வேறு இடத்திற்கு சென்று உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தஞ்சமடைகின்றனர். சிலர் அங்கேயே பாதுகாப்பின்றி தங்கியிருக்கின்றனர். இதே சின்னக்குப்பத்தில்தான் தூண்டில் வளைவு அமைப்பதற்காக முதலில் அடிக்கல் நாட்டப்பட்டும் செய்யப்பட்டும் இதுவரை பணிதுவங்கப்படவில்லை .
தடுப்புக் கற்களின் உயரத்தை அதிகரிக்க வேண்டும் என்று அப்பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எண்ணூர், திருவொற்றியூர் கடற்கரை கிராமங்களில், மூன்று நாட்களாக கடல் அதிக சீற்றத்துடன் காணப்படுவதால், கட்டுநர், சிறிய ரகப் படகுகள் வைத்திருப்போர் மீன்பிடிக்கச் செல்லவில்லை. இந்த சீற்றத்தால் 40 வயதான ஆர்.அருள் என்பவரின் வீடு சேதம் அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave A Reply