மதுரை லேடி டோக் கல்லூரி, சமூகப் பணித்துறை மாணவிகளுக்கான நான்கு நாள் வீதி நாடகப் பயிற்சி பட்டறை நடைபெற்றது. இந்த பட்டறையில் இரண்டு பிரச்சனைகளை நாடகமாக்கினார்கள் மாணவிகள்.ஒன்று விவசாயிகளுக்கு ஆதரவானது மற்றொன்று உ.பி.யில் அரசு மருத்துவ மனையில் இறந்து போன குழந்தைகள் குறித்தது.

குழந்தைகளின் மரணத்திற்கு ஆயிரம் காரணங்கள் கற்பிக்கப்பட்டாலும் , குழந்தையை இழந்த தாய்க்கு உரியவர்கள் பதில் சொல்லித்தான் தீர வண்டும், இதை ஒரு செய்தியாக மட்டும் பார்த்து, படித்து கடந்து போகும் நாம் என்ன பதில் சொல்லப் போகின்றோம்… என கேள்விகளை கேட்டது கோராக்பூர் வீதி நாடகம் .

கல்லூரி நுழைவு வாயிலில் ஒரே நாளில் இரு முறை இந்த நாடகம் நிகழ்த்தப் பட்டது. நாடகத்தை பார்த்த பேராசிரியர்கள், மாணவிகள் நிகழ்ச்சியின் இறுதியில் கலந்துரையாடினார்கள். தங்களின் கருத்துக்களையும் பதிவு செய்தார்கள்.
இந்த பயிற்சி சமூகப் பணித்துறை ஏற்பாட்டில் மையம் வீதி நாடக இயக்கம் நடத்தியது.

-Sathya Manickam

Leave A Reply

%d bloggers like this: