நீட் என்பது மருத்துவக் கல்வி என்பதால் பெரும்பாலானோர் நமக்கென்ன என்று கடக்கிறார்கள். அடுத்ததாக பொறியியல்தான். அதற்கடுத்து அவர்கள் அக்ரிக்கும் வருவார்கள். பின் சட்டத்திற்கும்.

பொறியியல், சட்டம் இரண்டு படிப்புகளுமே ஒடுக்கப்பட்ட இன மக்கள் அதிகமாக படிக்கும் பாடங்களாகும். இதில் நீட் வரும்போது படிப்பு என்பது மீண்டும் ஒரு குறிப்பிட்ட சாதியினர் கையில் மட்டுமே சென்றடங்கும்.
குலத் தொழில் கல்வி ஊக்குவிக்கப்படும் ஒரு நாளில் கடந்து போன சமூக நீதிக்கெல்லாம் வருந்த போகிறார்கள் இன்றெதுவும் பேசாதவர்கள்.

உங்கள் குழந்தைகளுக்கான, நம்முடைய எதிர்கால சந்ததி அனைவருக்கும் மருத்துவமும் பொறியியலும் சட்டமும் என்று அத்தனை கல்வியும் நீங்கள் இன்று எழுப்பும் எதிர்க்குரலில் தான் அடங்கி இருக்கிறது

–கவிதா சொர்ணவல்லி பதிவு …

Leave A Reply

%d bloggers like this: