மோடியும் ஆர்.எஸ்.எஸ்-ம் முத்தலாக் தொடர்புடைய தீர்ப்பை வரவேற்றிருக்கிறார்கள், இந்தியா முழுமையிலும் இந்த தீர்ப்புக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. உடன்கட்டை ஏறுதல், தேவதாசி முறை என்பது போல் ஒரு கேடு தான் இந்த அதிரடி தலாக்கும் அதை ஒழிப்பது இஸ்லாமிய பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதியில் இருந்து விடுதலை தரும்.

ஆனால் இந்த பெண்மணிக்கு யார் விடுதலையை தருவது, கல்யாணம் செய்த கணவன் 2014ல் தான் தன் தேர்தல் ஆவணங்களில் முதல் முறையான தனக்கு 1968ல் திருமணம் நடந்தது என்பதையே 46 ஆண்டுகளுக்கு பின் ஒப்புக்கொண்டார். இன்று வரை அந்த அம்மாவுக்கு மனைவி என்கிற மரியாதையை, அந்தஸ்தை கொடுத்ததில்லை. வேண்டாம் என விவாகரத்தும் செய்யவில்லை.

அவருடன் வாழாத போதும் இந்த அம்மாவின் மீது தொடர்ந்த கண்காணிப்பை செலுத்தி வருகிறார். இந்த பெண்மணிக்கு மத்திய அரசின் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது, இந்த எந்த வகையான பாதுகாப்பு, யார் என்னை பாதுகாக்கிறார்கள் என்று பல தகவல் அறியும் உரிமை மனுக்கள் செய்து வருடக்கணக்காக காத்திருக்கிறார்.

இந்த பெண்மணி தனக்கு பாஸ்போர்டு வேண்டும் என்று விண்ணப்பிதார், அதை தர இயலாது என்று உத்தரவிடுகிறது அரசு. இந்த பெண்மணி கலந்துகொள்ளும் விழாக்களை தடை செய்கிறது கணவரின் கட்சி.

நீதி கேட்டு காத்துக் கொண்டிருக்கிறார் இவர்… இந்த் பெண்ணுக்கு நீதி கிடைக்குமா??? பெண்களுக்கு விடுதலை கிடைக்குமா??

-Muthu Krishnan

Leave A Reply