வாஷிங்டன், அக்.
ஆப்கானிஸ்தானில் முகாமிட்டிருக்கும் அமெரிக்க படைகள் தற்போதைக்கு திரும்ப அழைக்கப்பட மாட்டார்கள் இறுதி வெற்றி பெற்ற பின்னரே திரும்ப அழைக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.
இது உலக அரங்கில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஒபாமா அதிபராக இருந்த போது ஆப்கானிஸ்தானில் இருந்து துருப்புகள் திரும்ப அழைக்கப்படுவார்கள் என உறுதி அளித்து அதற்கான நடவடிக்கைகளையும் எடுத்து வந்தார். ஆப்கானில் இருந்த ஒரு பகுதி அமெரிக்க ராணுவத்தினர் திரும்ப அழைக்கப்பட்டனர். ஒரு பிரிவினர் மட்டும் ஆப்கானில் இருந்தனர். அப்போது ஒபாமா ஆப்கானிஸ்தான் அரசு படைகளுக்கு பயிற்சி அளிக்கவே இருக்கின்றனர். இவர்களும் கூடிய விரைவில் திரும்ப அழைக்கப்படுவார்கள் என்று அறிவித்திருந்தார்.
ஆனால் டிரமப் அதிபராக பதவியேற்ற பின்னர் தற்போது ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க துருப்புகள் திரும்ப பெறமாட்டோம். முன்னர் திட்டமிட்டது போல துருப்பினரை மீள அழைக்கும் பட்சத்தில், வெற்றிடம் ஒன்று உருவாகும் எனவும், அது பயங்கரவாதிகளுக்கு சாதகமாக அமையும். போராடி வெற்றி பெற்றதன் பின்னரே துருப்பினர் தாயகத்திற்கு மீள அழைக்கப்படுவர். அமெரிக்க துருப்பினருக்கு ஈராக்கில் ஏற்பட்ட பின்னடைவு போன்று ஆப்கானிஸ்தானிலும் ஏற்படுவதை அனுமதிக்க முடியாது. எனினும், ஆப்கானிஸ்தானுடன் இணைந்து பயங்கரவாத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த அமெரிக்கா ஆக்கபூர்வமான செயற்பாட்டை மேற்கொள்ளும். ஆப்கானிஸ்தானை கட்டி எழுப்ப வேண்டுமானால், பயங்கரவாதிகள் கொல்லப்பட்டே ஆகவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க படையினரின்
மயானமாக ஆப்கான் மாறும்
இந்நிலையில் தலிபான் தீவிரவாதிகள் ஆப்கானிஸ்தானுக்கு வரும்   அமெரிக்கப் படையினருக்கு  அந்நாடு  ஒரு மயானமாக அமையும் என  எச்சரித்துள்ளனர்.“அமெரிக்கா ஆப்கானிஸ்தானிலிருந்து தனது படையினரை வாபஸ் பெறாவிட்டால் இந்த நூற்றாண்டின் அதிகார சக்தியாகவுள்ள அந்நாட்டிற்கு ஆப்கானிஸ்தான் பிறிதொரு மயான பூமியாக மாறும்” என தலிபான் தீவிரவாதக்குழுவின் பேச்சாளர் ஸபியுல்லாஹ் முஜாஹித் எச்சரித்துள்ளார். அமெரிக்கா போரைத் தொடர்வதை விடுத்து வெளியேறும் பாதுகாப்பாக வெளியேறும் திட்டம் குறித்து சிந்திக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மேலும் 4 ஆயிரம் அமெரிக்க வீரர்களை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்ப இருப்பதாக பென்டகன் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

%d bloggers like this: