திருநெல்வேலி;
108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர், அவசரகால மருத்துவ உதவியாளர் பணிக்கான ஆட்கள் தேர்வு ஆகஸ்ட் மாதம் 28ஆம் தேதி திருநெல்வேலியில் நடைபெற உள்ளது.

நெல்லை மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் இலவச மருத்துவ சேவைக்கான அவசரகால மருத்துவ உதவியாளர், ஓட்டுநர்கள் தேர்வு 28 ஆம் தேதி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற உள்ளது.

அவசர கால மருத்துவ உதவியாளர் பணி;                                                                                                                                                           இளநிலை அறிவியல் பட்டப் படிப்பு முடித்தவர்கள, இளநிலை செவிலியர் பட்டப் படிப்பு, இளநிலை உயிர்வேதியியல், நுண்ணுயிரியல், உயிர்நுட்பவியல் உள்ளிட்டவை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், பிளஸ்-2-க்கு பிறகு ஓராண்டு மருத்துவம் சார்ந்த படிப்பை அரசு மருத்துவக் கல்லூரியில் படித்தவர்களும் தகுதியானவர்கள்.

19 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகிய முறைகளில் தேர்வு செய்யப்படுவார்கள்.

இதுகுறித்த மேலும் விவரங்களை அறிய 7397724853 என்ற செல்லிடப்பேசி எண்ணில் காலை 10 முதல் மாலை 6 மணி தொடர்புகொண்டு கேட்டறியலாம்.

Leave A Reply

%d bloggers like this: