பென்டகன், அக்.

அமெரிக்க போர்க்கப்பல்கள் தொடர்ந்து விபத்திற்குள்ளாவது தற்செயலானது அல்ல, மாறாக சைபர் தாக்குதலாக இருக்கலாம் என சர்வதேச பத்திரிகைகள் செய்திகள் வெளியிட்டுள்ளன. இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள அமெரிக்கா விசாரணையின் போது அனைத்து அம்சங்களும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என மழுப்பலாக பதிலளித்துள்ளது.

அமெரிக்காவிற்கு சொந்தமான ஜான் எஸ்.மெக்கென் என்ற அதிநவீன போர்க்கப்பல் சிங்கப்பூர் கடலுக்கும் மலாக்கா தீவுக்கும் இடையே லிபிய நாட்டிற்கு சொந்தமான சரக்கு கப்பலுடன் மோதி விபத்திற்குள்ளானதை. இந்த விபத்தின் போது 10 அமெரிக்க வீரர்கள் கணாமல் போயிருக்கின்றனர். நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர். கடந்த மூன்று மாதங்களில் பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்ட இரண்டாவது ஆபத்தான விபத்து ஆகும். ஏற்கனவே கடந்த ஜூன் மாதம் 17ம் தேதி பிட்ஜெர்லாண்ட் என்ற அமெரிக்க போர் கப்பல் ஒன்று பிலிப்பைன் கண்டெய்னர் கப்பலுடன் மோதி ஜப்பான் கடற்பகுதியில் விபத்திற்குள்ளானது. இதையடுத்து பதட்டமடைந்திருக்கும் அமெரிக்க கடற்படை ஒரு கடற்படை திட்டத்தை அறிவித்து, பாதுகாப்பு நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்த திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

காரணம் சைபர் தாக்குதலில் அமெரிக்க போர்க்கப்பல்கள் சமீபகாலமாக தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர். குறிப்பாக வடகொரியாவிற்கு எதிராக அமெரிக்கா கடற்படைகளை தயார்படுத்தி வருகிறது. இதனை முறியடிக்கும் வகையில் திட்டமிட்டு அமெரிக்கா போர்க்கப்பல்களை சைபர் தாக்குதல் மூலம் சரக்கு கப்பலுடன் மோதவிடும் சம்பவம் அரங்கேற்றப்படுகிறதா என்ற சந்தேகம் வலுவாக எழுந்திருக்கிறது. ஆக என்னதான் ஆயுத பலம் கொண்டிருந்தாலும் இணையவழியில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சைபர் தாக்குதல்களை எதிர்கொள்ளும் ஆற்றல் யாரிடம் இருக்கிறதோ அவர்கள்தான் எதிர்காலத்தில் பலம்மிக்கவர்களாக இருப்பார்கள் கணினி வல்லுனர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Leave A Reply