பியாங்யாங், அக்.

அமெரிக்காவும் – தென்கொரியாவும் இராணுவ பயிற்சிகளை நிறுத்தும் வரை வடகொரியா தனது அணுஆயுத பரிசோதனையை நிறுத்தாது. அது தொடரும் என வடகொரியா தூதர் அறிவித்துள்ளார்.
சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனிவாச நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் பங்கேற்ற வடகொரியா தூதர் ஜூ யங் சோல் பங்கேற்று பேசினார். அப்போது அவர் தெரிவித்தாவது, ‘அணு ஆயுத பரிசோதனையில் இருந்து வட கொரியா ஒருபோதும் பின் வாங்காது. அமெரிக்கா மற்றும் தென் கொரியா ஆகிய இரு நாடுகளின் ராணுவ பயிற்சியானது ஏற்கனவே உள்ள போர் பதற்றத்தை அதிகரிக்கும்.மேலும், இரு நாடுகளும் இணைந்து வட கொரியாவிற்கு எதிராக ரகசிய போர் திட்டம் தீட்டி வருகின்றன. இரு நாடுகளின் அத்துமீறலால் கொரியா தீபகற்பத்தில் அணு ஆயுத போர் எந்த நேரத்திலும் நிகழும் அபாயம் உள்ளது’ என தெரிவித்தார். இது அமெரிக்கா மற்றும் தென்கொரியாவிற்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Leave A Reply

%d bloggers like this: