நாமக்கல், ஆக. 22- 100 நாள் வேலைத் திட்டத்தை பேரூராட்சி பகுதிகளுக்கும் விரிவுபடுத்தக்கோரி திங்களன்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாய தொழிலாளர்கள் முற்றுகையிட்டு மனு அளித்தனர். தேசிய கிராமப்புற வேலை உறுதி திட்டத்தை பேரூராட்சி பகுதிகளுக்கும் விரிவுபடுத்தி பணி வழங்கிட வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட கூலி ரூ.205 வழங்கிட வேண்டும். வேலை நாட்களை 150 நாட்களாக உயர்த்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திங்களன்று அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

இப்போராட்டத்திற்கு சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ஏ.லாசர் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சி.துரைசாமி, சிபிஎம் மாவட்ட செயலாளர் ஏ.ரங்கசாமி, பி.ஜெயமணி, விவ சாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பி.பெருமாள் ஆகியோர் போராட்ட கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இப்போராட்டத்தில் விவசாயதொழிலாளர் சங்கத்தின் பகுதி செயலாளர்கள் ப.ராமசாமி, வி.சதாசிவம், சின்னுசாமி, செல்வராஜ் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில், மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

Leave A Reply

%d bloggers like this: