சென்னை, ஆக.22- புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பன உள் ளிட்ட 3 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் ஆசிரியர், அரசு ஊழியர்கள் சுமார் 10 லட்சம் பேர் செவ்வாயன்று (ஆக.22) பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு அரசு ஊழியர், ஆசிரியர் களின் ஊதிய முரண்பாடுகளைக் களைந்து 8வது ஊதிய மாற்றத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்; அதுவரை 1.1.2016 முதல் 20 விழுக்காடு இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும், சிறப்பு காலமுறை, தொகுப்பு, மதிப்பூதியங்களை ஒழித்து வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தம் நடைபெற்றது. இதன் ஒருபகுதியாக சென்னை பள்ளிக்கல்வி இயக்குநரகம் (டிபிஐ) வளாகத்தில் 80 அமைப்புகளை உள்ளடக்கிய ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப் பாளர் ஜே.கணேசன் தலைமையில் இந்த வேலைநிறுத்த பெருந்திரள் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது.

முறையான அறிவிப்பு வழங்கி நடத்தப்படும் இந்தப் போராட்டத்தை ஒடுக்க காவல்துறையினர் காலையிலிருந்து டிபிஐ வளாகத்தில் யாரையும் அனுமதிக்காமல் கெடுபிடி செய்தனர். அரசு ஊழியர், ஆசிரியர்கள் பல்லாயிரக்கணக்கில் திரண்டதைக் கண்டு காவலர்கள் செய்வதறியாது திகைத்தனர். இருப்பினும் அமைதியான முறையில் கோரிக்கை முழக்கங்கள் முழங்கியபடி போராட்டம் நடைபெற்றது. இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்றால் தொகுப்பூதியம் போன்ற நிலைகளில் உள்ள ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று தலைமைச் செயலாளர் எச்சரித்திருந்த நிலையில் போராட்டம் எதிர்பார்த் ததை விட வீரியத்துடன் நடந்துள்ளதாக தலைவர்கள் தெரிவித்தனர்.

ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகளை அழைத்துப்பேசி கோரிக்கைகளை நிறைவேற்றாவிடில் நவம்பர் 7 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் நடைபெற உள்ள தாகவும் இதனையொட்டி ஆக 26,27 தேதிகளில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டத்தலைநகரங்களிலும் ஆயத்த மாநாடுகள் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தலைவர் கணேசன், அரசு ஊழியர் சங்க மாநில பொதுச்செயலாளர் மு.அன்பரசு ஆகியோர் கூறினர்.

Leave A Reply

%d bloggers like this: