வேலூர் மாநகரம் சென்னை பெங்களூர் சாலையில் அமைந்துள்ளது. அதனால் பல்வேறு வாகனங்கள் தினந்தோறும் மாநகரின் உள்ளே வந்து செல்கின்றன. அது மட்டுமில்லாமல் ஆந்திரா செல்லும் வாகனங்களும் புதிய பேருந்து நிலையம் வழியாக கடந்து செல்கின்றன.
சென்னையிலிருந்து வரும் வாகனங்களும் கீரின் சர்க்கிள் பகுதியில் வந்து நிற்பதோடு, ஆட்டோக்களும், இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை அதிகமானதால் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக மாறியது.  எனவே கடந்த சில தினங்களுக்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்த அதிகாரிகள் ஆய்வுக் கூட்டத்தில் போக்குவரத்தில் மாற்றம் செய்வது  என முடிவு செய்யப்பட்டது.

வேலூர் மாநகரில் இம் மாதம் 21 ஆம் தேதி  முதல்  போக்குவரத்து முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வேலூரிலிருந்து காட்பாடி செல்லும் பேருந்துகள் தவிர்த்து மற்ற வாகனங்கள் நேஷனல் திரையங்கம் அருகே இடதுபுறம் சாலை வழியாக சென்று தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலையை அடைந்து கொணவட்டம் ரயில்வே மேம்பாலம் வழியாக ‘யு டர்ன்’ எடுத்து புதிய பேருந்து நிலையம் பின்புறம் உள்ள புதிய மேம்பாலம் வழியாக காட்பாடி-திருப்பதி மார்க்கம் செல்ல வேண்டும்.

சென்னையிலிருந்து வரும் வாகனங்கள் சென்னை சில்க்ஸ் அருகே உள்ள சர்வீஸ் சாலையில் கீழே இறங்காமல் கிரீன் சர்க்கிளை கடந்து 1 கி.மீ தூரம் சென்று பாரத் பெட்ரோல் பங்க் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலையில் இறங்கி கொணவட்டம் ரயில்வே  மேம்பாலத்தின் அருகே உள்ள பெட்ரோல் பங்க் அருகே கீழிறங்கி ‘யு டர்ன்’ எடுத்து செல்ல வேண்டும்.
இந்த புதிய போக்குவரத்து மாற்றத்தினால் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்பட்டாலும் நிலைமை சீரடைய ஒரு வார காலமாகும். அதன் பிறகு இயல்பு நிலை திரும்பும் என்றார் ஆட்சியர்.

Leave A Reply

%d bloggers like this: