தொல்.திருமாவளவன் சாடல்: கோவை மக்கள் மேடை கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் பேசுகையில், வன்முறைகளை தூண்டுவதன் பின்னணியை இளைய தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டும். மதம் , சாதி ஆகியவற்றின் பெயரால் நடைபெறுகிற வன்முறைக்கு பின்னால் அரசியல் ஆதாயம் தேடுகிறதற்குறிகள் இருக்கின்றனர். அனைத்து விதமான வன்முறைகளின் பின்னணியில் அரசியல் செய்யும் என்பதை இளைஞர்கள் புரிந்துகொள்ள வேண்டும் எனவும். நன்கு திட்டமிட்ட இந்த வன்முறையை பயன்படுத்தி வாக்கு வங்கியாக அணி திரட்ட இந்துக்கள், இந்து அல்லாதவர்கள் என ஆர்எஸ்எஸ் பிரிக்கின்றது. இந்தியா முழுவதும் இதை ஒரு யுக்தியாக கொண்டு பாஜக செயல்பட்டு வருகிறது. இஸ்லாமிய , கிறிஸ்தவர்களுக்கு எதிரான வெறுப்பு அரசியலை யுக்தியாகவே சங்பரிவார அமைப்புகள் பயன்படுத்துகின்றன. சங்பரிவார இந்து அமைப்புகளால் திட்டமிட்டு தூண்டப்படுகின்றன.

இதுபோன்ற வன்முறையை தடுக்கவே கோவை மக்கள் மேடை அமைப்பு துவங்கப்படுகின்றது. அதிமுக இரு அணிகள் இணைப்பால் அதிமுக தொண்டர்கள் மகிழ்ச்சி அடையவில்லை. ஆனால் பிரதமர் மோடி மகிழ்ச்சி அடைக்கின்றார். அதிமுக மூலம் தமிழக அரசியலுக்குள் ஆதிக்கம் செலுத்த தமிழகத்தில் காலுன்ற பாஜக முயற்சிக்கிறது. தலைமையில் லாத அதிமுக என்ற அமைப்பினை பாஜகபயன்படுத்துகின்றது. அதிமுக பலவீனத்தை பயன்படுத்தி சாதியவாத , மதவாத சக்திகள்தமிழகத்தில் காலுன்ற விடக்கூடாது எனவும் அதிமுகவில் ஊடுருவது என்பது பெரியார் அரசியலுக்கு எதிரானது, திமுக தலைவர் கலைஞருக்கு பின்னர் திராவிடத்தை பற்றியாரும் பேசக்கூடாது என்பது ஆர்எஸ்எஸ் அமைப்பின் நோக்கம். மதவாத, சாதியவாத அமைப்புகளுக்கு எதிராக தமிழகம்முழுவதும் மக்கள் மேடை அமைக்கப்பட வேண்டும் என திருமாவளவன் பேசினார்.

இக்கூட்டத்தில் சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத், மாநிலக்குழு உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், திமுக மாவட்ட செயலாளர் முத்துசாமி, மதிமுக மாவட்ட செயலாளர் ஆர்.ஆர்.மோகன்குமார் உள்ளிட்ட தேமுதிக, தமாகா, சிபிஐ(எம்எல்), திவிக, புஜதொமு மற்றும் சமூக நீதிக்கட்சி உள்ளிட்ட அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர். கோவை மக்கள் மேடை துவக்கவிழா நிகழ்ச்சியில் கோவையில் இருந்து சுமார் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட இவ்வமைப்புகளின் ஊழியர்கள் திரண்டிருந்தனர். நிறைவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி நன்றி கூறினார்.

Leave A Reply

%d bloggers like this: