உதகை, ஆக.22- நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூர், கூடலூர் மற்றும் கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் ஜாக்டா – ஜியோ சார்பில் அடையாள வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டமைப்பின் நிர்வாகிகள் அண்ணாதுரை, குமாரராஜா, ஆனந்தன் மற்றும் சசிக்குமார் ஆகியோர் தலைமை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தை கூட்டமைப்பின் மாவட்ட ஓருங்கிணைப்பாளர் ஆஸரா துவக்கி வைத்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில், முதுநிலை மேல்நிலை பட்டதாரிகள் ஆசிரியர்கள் சங்கத்தின் சசிக்குமார் நிறைவுரை ஆற்றினார்.

கூடலூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அரசு ஊழியர் சங்கத்தின் இணை செயலாளர் சலீம், பட்டதாரிகள் ஆசிரியர்கள் சங்கத்தின் அன்பழகன், தமிழக ஆசிரியர் கூட்டணியின் முருகேசன், கிராம சுகாதார செவிலியர்கள் சங்க மாநில தலைவர் பரமேஸ்வரி ஆகியோர் தலைமை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 800க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். குன்னூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டமைப்பின் தலைவர் ஆர்.நஞ்சப்பன், துவக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் முரளி ஆகியோர் தலைமை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

கோத்தகிரியில் மார்கெட் திடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அரசு ஊழியர் சங்கத்தின் கோத்தகிரி வட்டத் தலைவர் ஐயனார், வட்டார செயலாளர் பலசுப்பிரமணி, தமிழ்நாடு முதுநிலை பட்டதாரிகள் ஆசிரியர் கழகத்தின் ஏ.சரவணன் ஆகியோர் தலைமை வகித்தனர். ஜாக்டோ மாவட்ட தொடர்பாளர் பி.ஜெயசீலன், துவக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஜி.வேல்முருகன் உட்பட 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Leave A Reply