சாத்தர்பூர்: திறந்த வெளியில் மலம் கழித்த தலித் சிறுமியை அவரது கைகளால் மலம் அள்ள வைத்துள்ள கொடூரம் நாடு முழுவதிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப்பிரதேசம் மாநிலம் லங்குஸ்காகர் மாவட்டத்தில் உள்ள குட்ஹோரா என்ற கிராமத்தில் அரசு துவக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகின்றது. இங்கு இரண்டாம் வகுப்பு தலித் சிறுமி ஒருவர் திறந்த வெளியில் மலம் கழித்துள்ளார். அப்போது அங்கு வந்த உயர் சாதியை சேர்ந்த பப்பு சிங் என்பவர் சிறுமியின் மலத்தை அவரது கையாளையே அள்ளும் படி மிரட்டி அள்ள செய்துள்ளார். இதுகுறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதுதொடர்பாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து பப்பு சிங் என்பவரை தேடி வருகின்றனர்.

Leave A Reply