தென்மாநில வணிகர் கூட்டமைப்பின் கூட்டம் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமையில் செவ்வாயன்று சென்னையில் (ஆக. 22) நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் அகில இந்திய வணிகர்கள் சம்மேளனத் தலைவர் பி.சி.பார்த்தியா, பொதுச்செயலாளர் ப்ரவீண் கண்டேல்வால்  மற்றும் ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி, தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் மற்றும் அந்தமான் நிக்கோபர் லட்சத்தீவு யூனியன் பிரதேச நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
ஜி.எஸ்.டி-யிலிருந்து விலக்களிக்கப்பட்டிருக்கும் உச்சவரம்பை 20 லட்சத்திலிருந்து 50 லட்சமாக உயர்த்த வேண்டும், ஜிஎஸ்டி வரி கணக்கு தாக்கல் செய்வதை எளிமைப்படுத்த வேண்டும், ஜிஎஸ்டி தண்டனைச் சட்ட நடைமுறைகள் மாற்றியமைக்கப்பட வேண்டும், சிறைத்தண்டனை என்பது வணிக விரோதமானது, சாதாரண பேக்கரிகளில் தயாராகும் பிஸ்கட், கைத்தொழில் மிட்டாய், பொரிஉருண்டை, கடலைமிட்டாய், மெழுகுவர்த்தி, அகர்பத்தி, பூஜைப்பொருட்கள் இவற்றிற்கு வரி விலக்களிக்க வேண்டும், 500 ரூபாய் வரையுள்ள காலணிகளுக்கு வரி விலக்களிக்க வேண்டும். வீட்டு உபயோகப் பொருட்கள், மருத்துவ சாதனங்கள், சைக்கிள், மூக்குக்கண்ணாடி (லென்ஸ்), ஸ்டேஷனரி சாமான்கள், பென்சில், கைத்தொழில் தீப்பெட்டி, ஏழைகள் பயன்படுத்தும் அலுமினியப் பாத்திரங்கள், கைத்தொழில் பட்டாசுகள் (பட்டாசுக்கு 28 விழுக்காடு ஜிஎஸ்டி என்பது ஏற்புடையதல்ல) ஆகியவற்றின் வரி விதிப்பினை மாற்றியமைக்க வேண்டும், உயிர்காக்கும் அத்தியாவசியமான புற்றுநோய் சர்க்கரை நோய், ரத்த அழுத்த நோய் போன்ற நெடுநாள் பயன்படுத்தும் மருந்துகளுக்கு வரியில் இருந்து விலக்களிக்க வேண்டும், பழைய இரும்பு, பிளாஸ்டிக், அட்டை, பேப்பர் போன்ற பொருட்களுக்கு வரி விதிப்பிலிருந்து விலக்களிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Leave A Reply

%d bloggers like this: