சென்னை,

 வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.

தமிழக போக்குவரத்து அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், மது அருந்தி வாகனம் ஓட்டுவது, வாகனங்களில் அதிக பாரம் ஏற்றி செல்வது உள்ளிட்ட விதிமீறல்கள் தொடர்பாக இதுவரை 9,500 ஓட்டுநர் உரிமங்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் ஓட்டுநர்கள் அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். வாகன விபத்துகளை குறைக்கவும், உயிரிழப்புகளை தடுக்கவும்  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேசிய அளவில் தமிழகத்தில் தான் சிறந்த சாலைகள் உள்ளன. போக்குவரத்து அமைச்சகத்தின் நடவடிக்கை மூலம் இதுவரை 3,240 விபத்துகள், 309 உயிரிழப்புகள் தடுக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள் சென்னையில் பேட்டரி மூலம் இயங்கும் பேருந்துகள் இயக்கப்படும் என்றார்.

Leave A Reply

%d bloggers like this: