அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் 15வது மாநில மாநாடு செப்டம்பர் 23ந்தேதிமுதல் 26 வரை தருமபுரியில் நடைபெறுகிறது. இதையொட்டி  சாதி ஒடுக்கு முறையிலிருந்து பெண்களை பாதுகாத் திடவும், ஆணவக் கொலைகளை தடுக்கவும் தனி சிறப்பு சட்டம் இயற்றக் கோரி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஒழிப்பு சார்பில் கருத்தரங்கம் பென்னாகரத்தில் நடைபெற்றது.

சங்கத்தின் மாவட்டச் செயலாளர்  டி. மாதையன் தலைமை தாங்கினார். வட்டச் செயலாளர் எஸ்.வெள்ளிங்கிரி வரவேற்றார். மாவட்டத் தலைவர் டி.எஸ்.ராமச்சந்திரன், வட்டத் தலைவர் வி.ரவி, சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஏ.குமார்,  நிர்வாகிகள் சி.ராமன், இ.கே.முருகன், செல்வராஜ், வெங்கடேசன், சங்கு,  மாதர் சங்க வட்டத் தலைவர் வளர்மதி, வட்டச் செயலாளர் சுதாபாரதி, மனித உரிமைகள் கட்சி மாநிலத் தலைவர் பி.துரைராஜ், பண்ணியான் டிகள் சங்க மாவட்டச் செயலாளர் டி.ஜி.சம்பத், அருந்ததியர் கூட்டமைப்பு தலைவர் சிவாஜி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த கருத்தரங்கில் “சாதிய ஒடுக்குமுறையும் பெண்களும்” என்ற தலைப்பில் மாநில பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ் பேசியதான் சுருக்கம் வருமாறு:-
சமூகத்தில் முக்கிய பிரச்சனையாக இருப்பது மதுபானக்கடைகள். இக்கடையை நடத்துவது அரசு. தமிழகத்திலுள்ள 7 கோடி பேரில் 1 கோடி பேர் தினமும் குடிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. குடிப்பவ ரின் குழந்தைகள் மனதளவில் பாதிக்கப் படுவதாக ஆய்வு கூறுகிறது. மதுபானக் கடைகளை மூடவலியுறுத்தி மாதர் சங்கம் பல்வேறு போராட்டங்களை நடத்தி 200 க்கும் மேற்பட்ட கடைகளை மூடியுள்ளது.

பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளுக்கு எதிராகப் போராடவும் தனிச் சட்டம் இயற்றவும், பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாக்கவும் மாதர் சங்கம் போராடிவருகிறது.
மகளிர் சுய உதவிக்குழுக்கள் உருவாக்கப்பட்டு அவர்கள் சொந்த உழைப்பில் முன்னேறவும் சேமிப்பு, கடன்பெறவும் சுய உதவிக் குழுக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இவர்களை அரசு அடிமையாக நடத்துகிறது. ஆனால் மாதர் சங்கம் பெண்களுக்கு சுயமரியாதை அரசியலை கற்றுக்கொடுக்கிறது.பெண்களுக்கு எதிராக குற்றம் நடந்தால் பெண்கள் சரியில்லை என்று பெண்கள் மீதே குற்றம் சுமத்துகின்றனர். தலித்பெண்கள் உரிமைகளுக்காகவும், பெண்க ளுக்கு சம உரிமை, சமகூலி, சம அந்தஸ்து, கல்வி வேலை வாய்ப்பு கிடைக்கவும் போராடும் அமைப்பு மாதர் சங்கம்.இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.