திருநெல்வேலி, ஆக. 22- விவசாய தொழிலாளர்கள் அக்டோபர் 3ஆம் தேதி கோட்டை நோக்கி பேரணி நடத்த முடிவு செய்துள்ளனர்.  நெல்லையில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநிலக் குழு கூட்டம் ஞாயிறன்று பாளையங்கோட்டையில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் ஏ.லாசர் தலைமை தாங்கினார். சங்கத்தின் அகில இந்திய தலைவர் திருநாவுக்கரசு, மாநில பொறுப்பு செயலாளர் வீ.அமிர்தலிங்கம் ஆகியோர் பேசினர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் 150 நாள் வேலை ரூ.205 சட்டப்படியான கூலி வழங்காததற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலைநாட்களை, ரூ.200 கூலியை ரூ.400ஆகவும் உயர்த்தி வழங்க வேண்டும். திட்டத்தை பேரூராட்சிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும். விவசாய தொழிலாளர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். காவிரி பிரச்சனையை தீர்க்க இரு மாநில அரசுகளும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இக்கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் மாதம் 3ஆம் தேதி விவசாயத் தொழிலாளர்களை திரட்டி கோட்டை நோக்கி பேரணி நடத்துவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. கோரிக்கைகளை வலியுறுத்தி செப்-25ஆம் தேதி முதல் செப்-30ஆம் தேதி வரை ஒரு வாரம் பிரச்சார இயக்கம் நடத்துவது எனவும் மாநில குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Leave A Reply