வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் ஊக்க உதவித் தொகை பெற, வருகிற ஆகஸ்ட் 31-க்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் விளையாட்டு வீரர்களுக்கு ரூ.10,000-ம், கல்லூரி, பல்கலைக்கழக வீரர்களுக்கு ரூ. 13,000-ம்  ஊக்க உதவித் தொகையாக வழங்கப்படுகிறது. கடந்த 2016 ஜூலை 1-ஆம் தேதி முதல் 2017 ஜூன் 30-ஆம் தேதி வரையிலான காலங்களில் விளையாட்டுத் துறைகளில் வெற்றிகளைப் பெற்றவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.

ஊக்க உதவித் தொகை விண்ணப்பிக்கத் தகுதியான 34 வகையான விளையாட்டுகள் விவரம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளமான www.sdat.tn.gov.in  என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.  மாவட்ட விளையாட்டு, இளைஞர் நலன் அலுவலகத்தில் ரூ. 10 செலுத்தி விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம். இணையதளம் மூலம் பெறப்படும் விண்ணப்பத்துக்கு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் பெயருக்கு ரூ.10-க்கு வரைவோலை பெற்று பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வருகிற ஆகஸ்ட் மாதம் 31-ஆம் தேதிக்குள் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும். இதுதொடர்பாக மேலும் விவரம் வேண்டுவோர் 0416-2221721, 74017-03483 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன்  அறிக்கை ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.

Leave A Reply

%d bloggers like this: