கோயம்புத்தூர், ஆக.22- இந்திய அரசியல் சட்டத்தை முன் மொழிந்து அம்பேத்கர் பேசுகையில், நல்ல ஆட்சியாளர்களால் இந்த சட்டம் செயல்படுத்தப்படுமானால் நல்லது நடக்கும். மாறாக தீயவர்கள் கைகளில் கிடைத்தால் நல்லது நடக்காது என்றார்.

இன்று தீயவர்கள் கைகளில் இந்திய தேசம் சிக்கியுள்ளது. இதனை உழைப் பாளி மக்கள் விரட்டியடிப்பார்கள். அத்தகைய பணியை மார்க்சிய, அம்பேத்கரிய, பெரியாரிய திராவிட இயக்கங்கள் ஒன்றிணைந்து துவக்கியுள்ள இந்த மக்கள் மேடை கோவை மக்களுக்கு மட்டுமல்ல நாட்டின் அனைத்துப்பகுதி மக்களுக்கும் நம்பிக்கையூட்டுவதாக உள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ்காரத் கூறினார். உழைப்பாளி மக்கள் நிறைந்துள்ள கோவை மாவட்டம் கடந்த சில காலமாக மத அடிப்படைவாதிகளால் தொடர்ந்து பதற்றத்திற்கு உள்ளாகி வருகிறது. திட்டமிட்டு மத வன்முறையை உருவாக்கி மக்கள் ஒற்றுமையை, மதநல்லிணக்கத்தை குலைத்து இருதரப்பு மதஅடிப்படைவாத அமைப்புகளும் பிரிவினையை ஏற்படுத்த முயல்கின்றன. இதனையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், மதச்சார்பற்ற முற்போக்கு ஜனநாயக சக்திகளை ஒன்றிணைத்து கோவை மக்கள் மேடை அமைப்பை உருவாக்குவது என முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

இதைத்தொடர்ந்து சிஐடியு கோவை மாவட்டத் தலைவர் சி.பத்மநாபனை ஒருங்கிணைப்பாளராக கொண்டு அமைதி, ஒற்றுமை, மதநல்லிணக்கத்திற்கான முழக்கங்களை முன்வைத்து மார்க்சிய, அம்பேத்கரிய, பெரியாரிய அமைப்புகளின் நிர்வாகிகள் ஒன்றிணைந்து கோவை மக்கள் மேடை என்கிற அமைப்பு உருவாக்கப்பட்டது. இதன் துவக்கவிழா ஆயிரக்கணக்கான மக்கள் பங் கேற்ற பேரெழுச்சியோடு கோவை சாய்விவாக மஹாலில் திங்களன்று துவக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிரகாஷ்காரத், திராவிட முன்னேற்ற கழக மகளிர் அணிச் செயலாளர் மு.க.கனிமொழி எம்பி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத்தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக்குழு உறுப்பினர் கே.சுப்பராயன், காங்கிரஸ் கட்சியின் மயூரா.எஸ்.ஜெயக் குமார், தந்தைபெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர்.

கோவை மக்கள் மேடை துவக்கவிழாவிற்கு திமுக சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் தலைமை தாங்கினார். ஏஐடியுசி மாநில பொருளாளர் எம்.ஆறுமுகம் வரவேற்புரையாற்றினார். அமைப்பின் நோக்கங்கள் குறித்து ஒருங்கிணைப்பாளர் சி.பத்மநாபன் உரையாற்றினார். தொடர்ந்து பியூசிஎல் அமைப்பின் வழக்கறிஞர்.எஸ்.பாலமுருகன், ஆதித்தமிழர் கட்சியின் தலைவர் சி.வெண்மணி ஆகியோர் உரையாற்றினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ்காரத் பேசுகையில், ஆர்எஸ்எஸ் வழிகாட்டுதலில் பாஜக ஒற்றை தேசம். ஒற்றை கலாச்சாரம், ஒற்றை மொழி என செயல்பட்டு வருகின்றது. ஒரு தேசம் என இவர்கள் வரையறுப்பது இந்துகளுக்கான தேசம் என்பதாகும். ஒற்றை பிம்பம் என்பதன் பொருள் குறித்து இவர்களின் குருவான கோல்வாக்கர் கூறுகிறார். இந்து மதம்தான் இந்திய மண்ணில் தோன்றியது. இதனை பின்பற்றுபவர்கள்தான் இந்துக்கள். இந்திய தேசம் என்பது இந்துக்களை கொண்டது என்கிறார். அந்நிய மண்ணில் தோன்றியவை இஸ்லாமியம், கிறிஸ்துவம். இவற்றை பின்பற்றுபவர்கள் இந்தியர் அல்ல என்பது இவர்களின் கருத்தாக உள்ளது. ஒற்றை தேசம் என்பது இந்துக்களுக்கு மட்டுமே என்கிற கோட்பாடாக உள்ளது.

இது இந்தியாவின் அடிப்படை அரசியல் சாசனத்தையும், குடியரசு கோட்பாட்டையும், அடிப்படையில் உத்தரவாதம் செய்கிற மதச்சார்பற்ற உரிமையையும் கொச்சைப்படுத்தும் செயல் திட்டத்தை ஆர்எஸ்எஸ் மோடியின் தலைமையில் செயல்படுத்தி வருகிறது.அடுத்து ஒற்றை மொழி என்பது இவர்களது இலக்கு. துவக்கத்தில் சமஸ்கிருதத்தை முன்மொழிந்தவர்கள் தற்போது இந்தி மொழியை அனைத்திலும் கட்டாயப்படுத்துகிறார்கள். இந் திய தேசம் அடிப்படையில் பல்வேறு மொழிகளை பேசக்கூடிய மக்கள் வாழ்கிற தேசம். ஆனால் இந்தியை தவிர இதர அனைத்து மொழிகளையும் தாழ்ந்த மொழியாக நடத்துகிறது பாஜக மத்திய அரசு. மேலும், இவர்கள் சொல்கிறஒற்றை கலாச்சாராம் மனு தர்மத்தின் படி, வர்ணாசிரம கோட்பாட்டின் படி பிராமணிய கண்ணோட்டத்தோடு பார்க்கப்படுகிற ஆர்எஸ்எஸ் ஒற்றை கலாச்சாரம்.இதன் விளைவாகத்தான் பாஜக ஆளும்மாநிலங்களிலும் எல்லாம் ஆர்எஸ்எஸ் – பாஜக பரிவாரங்களால் இஸ்லாமிய, கிறிஸ்துவ, தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. மாட்டிறைச்சியின் பெயரால் இஸ்லாமிய, தலித் மக்கள்பலர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

அம்பேத்கர் அவர்கள் இந்திய அரசியல் சட்டத்தை முன்வைத்து பேசியதை இங்கு நினைவு கூர வேண்டுகிறேன். இந்த சட்டம் நல்லவர்கள் கையில் கிடைத்தால் நல்லது நடக்கும். தீயவர்கள் கையில் கிடைத்தால் தீயதே நடக்கும் என்றார். இன்று தீயவர்கள் கையில் ஆட்சி இருப்பதால் தீமை நிகழ்ந்து கொண்டிருக்கிறது. வடமாநிலங்களில் விநாயகர் சதுர்த்தியை வன்முறைக்கு வித்திடுவதற்கு பயன்படுத்தியவர்கள், தற்போது தமிழகத்தில் இது போன்றவன்முறைகளை விநாயகர் சதுர்த்தியை கொண்டு நிகழ்த்துவதற்கான முயற்சியை மேற்கொள்கின்றனர். உழைப்பாளி மக்கள் மிகுந்துள்ள கோவை, திருப்பூர் போன்ற பகுதிகளில் மக்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்த இந்துத்துவாஅமைப்புகள் முயற்சிக்கின்றன. இவர்களின் இந்த முயற்சியை முறியடிக்கவே இந்த மக்கள் மேடை என்ற அமைப்பு துவங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிமுகவை பாஜகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் தங்கள் கருத்துகளை முன்னெடுத்து செல்வதற்கான கருவியாக பயன்படுத்துகின்றன. தங்கள் நோக்கத்தை அதிமுகமூலமாக நிறைவேற்ற பாஜக முயல் கிறது. இதனை உழைப்பாளி மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். இடதுசாரி, அம்பேத்கரிய, திராவிட இயக்கங்கள் ஆர்எஸ்எஸ் முன்வைக் கிற இந்துத்துவா நிகழ்ச்சி நிரலை எதிர்கொண்டு பின்னுக்குத் தள்ள வேண்டும் என்றார்.

கோயம்புத்தூர், ஆக.22- இந்திய அரசியல் சட்டத்தை முன் மொழிந்து அம்பேத்கர் பேசுகையில், நல்ல ஆட்சியாளர்களால் இந்த சட்டம் செயல்படுத்தப்படுமானால் நல்லது நடக்கும். மாறாக தீயவர்கள் கைகளில் கிடைத்தால் நல்லது நடக்காது என்றார்.இன்று தீயவர்கள் கைகளில் இந்தியதேசம் சிக்கியுள்ளது. இதனை உழைப் பாளி மக்கள் விரட்டியடிப்பார்கள். அத்தகைய பணியை மார்க்சிய, அம்பேத்கரிய, பெரியாரிய திராவிட இயக்கங்கள் ஒன்றிணைந்து துவக்கியுள்ள இந்த மக்கள் மேடை கோவை மக்களுக்கு மட்டுமல்ல நாட்டின் அனைத்துப்பகுதி மக்களுக்கும் நம்பிக்கையூட்டுவதாக உள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ்காரத் கூறினார். உழைப்பாளி மக்கள் நிறைந்துள்ள கோவை மாவட்டம் கடந்த சில காலமாக மத அடிப்படைவாதிகளால் தொடர்ந்து பதற்றத்திற்கு உள்ளாகி வருகிறது. திட்டமிட்டு மத வன்முறையை உருவாக்கி மக்கள் ஒற்றுமையை, மதநல்லிணக்கத்தை குலைத்து இருதரப்பு மதஅடிப்படைவாத அமைப்புகளும் பிரிவினையை ஏற்படுத்த முயல்கின்றன.

இதனையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், மதச்சார்பற்ற முற்போக்கு ஜனநாயக சக்திகளை ஒன்றிணைத்து கோவை மக்கள் மேடை அமைப்பை உருவாக்குவது என முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்து சிஐடியு கோவை மாவட்டத் தலைவர் சி.பத்மநாபனை ஒருங்கிணைப்பாளராக கொண்டு அமைதி, ஒற்றுமை, மதநல்லிணக்கத்திற்கான முழக்கங்களை முன்வைத்து மார்க்சிய, அம்பேத்கரிய, பெரியாரிய அமைப்புகளின் நிர்வாகிகள் ஒன்றிணைந்து கோவை மக்கள் மேடை என்கிற அமைப்பு உருவாக்கப்பட்டது. இதன் துவக்க விழா ஆயிரக்கணக்கான மக்கள் பங் கேற்ற பேரெழுச்சியோடு கோவை சாய்விவாக மஹாலில் திங்களன்று துவக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிரகாஷ்காரத், திராவிட முன்னேற்ற கழக மகளிர் அணிச்செயலாளர் மு.க.கனிமொழி எம்பி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத்தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக்குழு உறுப்பினர் கே.சுப்பராயன், காங்கிரஸ் கட்சியின் மயூரா.எஸ்.ஜெயக் குமார், தந்தைபெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர். கோவை மக்கள் மேடை துவக்கவிழாவிற்கு திமுக சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் தலைமை தாங்கினார். ஏஐடியுசி மாநில பொருளாளர் எம்.ஆறுமுகம் வரவேற்புரையாற்றினார். அமைப்பின் நோக்கங்கள் குறித்து ஒருங்கிணைப்பாளர் சி.பத்மநாபன் உரையாற்றினார். தொடர்ந்து பியூசிஎல் அமைப்பின் வழக்கறிஞர்.எஸ்.பாலமுருகன், ஆதித்தமிழர் கட்சியின் தலைவர் சி.வெண்மணி ஆகியோர் உரையாற்றினர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ்காரத் பேசுகையில், ஆர்எஸ்எஸ் வழிகாட்டுதலில் பாஜக ஒற்றை தேசம். ஒற்றை கலாச்சாரம், ஒற்றை மொழி என செயல்பட்டு வருகின்றது. ஒரு தேசம் என இவர்கள் வரையறுப்பது இந்துகளுக்கான தேசம் என்பதாகும். ஒற்றை பிம்பம் என்பதன் பொருள் குறித்து இவர்களின் குருவான கோல்வாக்கர் கூறுகிறார். இந்துமதம்தான் இந்திய மண்ணில் தோன்றியது. இதனை பின்பற்றுபவர்கள்தான் இந்துக்கள். இந்திய தேசம் என்பது இந்துக்களை கொண்டது என்கிறார். அந்நிய மண்ணில் தோன்றியவை இஸ்லாமியம், கிறிஸ்துவம். இவற்றை பின்பற்றுபவர்கள் இந்தியர் அல்ல என்பது இவர்களின் கருத்தாக உள்ளது. ஒற்றை தேசம் என்பது இந்துக்களுக்கு மட்டுமே என்கிற கோட்பாடாக உள்ளது.இது இந்தியாவின் அடிப்படை அரசியல் சாசனத்தையும், குடியரசு கோட்பாட்டையும், அடிப்படையில் உத்தரவாதம் செய்கிற மதச்சார்பற்ற உரிமையையும் கொச்சைப்படுத்தும் செயல் திட்டத்தை ஆர்எஸ்எஸ் மோடியின் தலைமையில் செயல்படுத்தி வருகிறது.

அடுத்து ஒற்றை மொழி என்பது இவர்களது இலக்கு. துவக்கத்தில் சமஸ்கிருதத்தை முன்மொழிந்தவர்கள் தற்போது இந்தி மொழியை அனைத்திலும் கட்டாயப்படுத்துகிறார்கள். இந் திய தேசம் அடிப்படையில் பல்வேறு மொழிகளை பேசக்கூடிய மக்கள் வாழ்கிற தேசம். ஆனால் இந்தியை தவிர இதர அனைத்து மொழிகளையும் தாழ்ந்த மொழியாக நடத்துகிறது பாஜக மத்தியஅரசு. மேலும், இவர்கள் சொல்கிற ஒற்றை கலாச்சாராம் மனு தர்மத்தின் படி, வர்ணாசிரம கோட்பாட்டின் படி பிராமணிய கண்ணோட்டத்தோடு பார்க்கப்படுகிற ஆர்எஸ்எஸ் ஒற்றை கலாச்சாரம்.இதன் விளைவாகத்தான் பாஜக ஆளும்மாநிலங்களிலும் எல்லாம் ஆர்எஸ்எஸ் – பாஜக பரிவாரங்களால் இஸ்லாமிய, கிறிஸ்துவ, தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. மாட்டிறைச்சியின் பெயரால் இஸ்லாமிய, தலித் மக்கள்பலர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

அம்பேத்கர் அவர்கள் இந்திய அரசியல் சட்டத்தை முன்வைத்து பேசியதை இங்கு நினைவு கூர வேண்டுகிறேன். இந்த சட்டம் நல்லவர்கள் கையில் கிடைத்தால் நல்லது நடக்கும். தீயவர்கள் கையில் கிடைத்தால் தீயதே நடக்கும் என்றார். இன்று தீயவர்கள் கையில் ஆட்சி இருப்பதால் தீமை நிகழ்ந்து கொண்டிருக்கிறது. வடமாநிலங்களில் விநாயகர் சதுர்த்தியை வன்முறைக்கு வித்திடுவதற்கு பயன்படுத்தியவர்கள், தற்போது தமிழகத்தில் இது போன்றவன்முறைகளை விநாயகர் சதுர்த்தியை கொண்டு நிகழ்த்துவதற்கான முயற்சியை மேற்கொள்கின்றனர். உழைப்பாளிமக்கள் மிகுந்துள்ள கோவை, திருப்பூர் போன்ற பகுதிகளில் மக்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்த இந்துத்துவாஅமைப்புகள் முயற்சிக்கின்றன. இவர்களின் இந்த முயற்சியை முறியடிக்கவே இந்த மக்கள் மேடை என்ற அமைப்பு துவங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அதிமுகவை பாஜகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் தங்கள் கருத்துகளை முன்னெடுத்து செல்வதற்கான கருவியாக பயன்படுத்துகின்றன. தங்கள் நோக்கத்தை அதிமுக மூலமாக நிறைவேற்ற பாஜக முயல் கிறது. இதனை உழைப்பாளி மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். இடதுசாரி, அம்பேத்கரிய, திராவிட இயக்கங்கள் ஆர்எஸ்எஸ் முன்வைக் கிற இந்துத்துவா நிகழ்ச்சி நிரலை எதிர்கொண்டு பின்னுக்குத் தள்ள வேண்டும் என்றார்.

Leave A Reply

%d bloggers like this: