கோவை, ஆக. 22- கோவை ஈஷா யோகா மையத்தின் அருகேயானை தாக்கி பெண் ஒருவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி குளித்தலை பகுதி மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் சாரதா (55). இவர் கோவை ஈஷா யோகா மையத்தின் அருகே உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் செவ்வாயன்று காலை இயற்கை உபாதை கழிக்க சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் அவரை தேடிச் சென்றபோது, ஈஷா மையத்திற்கு அருகேயுள்ள பூண்டி தெற்கு பட்டியார் கோவில்பதி பொன்னுசாமி என்பவரது தோட்டத்தின் அருகே காட்டு யானை தாக்கி இறந்த நிலையில் கிடந்தார்.

இதுகுறித்து வனத்துறையினருக்கு அளித்த தகவலின்பேரில் பூளுவாம்பட்டி வனச்சரகத்தை சேர்ந்த வன அலுவலர் சிவா உத்தரவின் பேரில் சாரதாவின் உடலை கைப்பற்றி கோவை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து யானை நடமாட்டம் குறித்து கண்டறிய 6பேர் கொண்ட தனிக்குழு அமைத்து யானைகளை மீண்டும் ஊருக்குள் நுழையாதவாறு தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Leave A Reply