கனிமொழி பேச்சு: கோவை மக்கள் மேடை துவக்க விழாவில் திமுக மகளிர் அணி செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி பேசுகையில், கோவை மக்கள் மேடை நிகழ்ச்சியை தமிழக அளவில் விரிவுபடுத்த வேண்டும். மதங்களுக்கு இடையே வெறுப்பை பாஜகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் தூண்டிக்கொண்டு இருக்கிறது. மாட்டிறைச்சி சாப்பிட கூடாது என்பதை யார் முடிவு செய்வது. பெண்கள் மீதான வன்முறைகளின் போது பாஜக தலைவர்கள் பெண்களையே குறைசொல்கின்றனர். சாதி,மத ரீதியான மோதல்களில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான். உலகில் மதரீதியான தாக்குல் நடைபெறும் நாடுகளில் இந்தியா நான்காவது இடத்தில் இருக்கின் றது. கடவுள் பற்றி யாரும் பேசக்கூடாது என புதிதாக ஒரு பிரச்சாரம் நடைபெறுகிறது.

நாத்திகர்களுக்கு கருத்து சொல்ல உரிமையில்லை என்ற நிலையை ஏற்படுத்த பார்க்கின்றனர். தமிழகத்தில் பாஜக தலைவர் ஒருவர் பெரியாரை பற்றி பேசிய போது தமிழகத்தில் யாரும் அவருக்கு பதில் சொல்லவில்லை. மௌனமாக இருந்துவிட்டோம். இந்த நிலை இனி வரக்கூடாது விழிப்படைய வேண்டும். இந்து அமைப்புகள் மதங்களுக்கிடையே வெறுப்புணர்ச்சியை தூண்டுகின்றனர். அடுத்ததாக சாதிகளுக்கிடையே வெறுப்புணர்ச்சி ஏற்படுத்தி கலவரம் ஏற்படுத்த முயற்சிப் பார்கள். அதிமுக அணிகள் இணைப்பிற்கு உடனடியாக டுவிட்டரில் வாழ்த்து சொல்லும் அக்கறையை பிரதமர் மோடி தமிழக மாணவர்களுக்கான நீட் தேர்வு விவகாரத்திலும் காட்டி இருக்கலாம்.

தில்லியில் போராடும் தமிழக விவசாயிகள் பிரச்சனையில் காட்டி இருக்கலாம். தமிழகத்தின் மீது எந்த அக்கறையும் இல்லாதவர்கள்தான் மத்தியில் ஆட்சியில் இருக்கும் மோடி அரசு. வெறுப்பு அரசியலை விதைத்து நம்மை பிரித்து ஆளவிடக்கூடாது. இந்துத்துவா சக்திகளை வேரறுக்க தமிழர்களாய் ஒன்றிணை வோம். இந்த மக்கள் மேடை அமைப்பை கிராமங்கள் தோறும் ஏற்படுத்துவோம் என கனிமொழி உரையாற்றினார்.

Leave A Reply

%d bloggers like this: