ஆண்ட்ராய்ட் போன்களில் நாம் அவ்வப்போது சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று மெமரி போதவில்லை என்பது. அதிகமான படங்கள், வீடியோக்கள், அப்ளிகேஷன்கள் போன் மெமரியை எடுத்துக் கொள்வதால்தான் இந்த எச்சரிக்கை அறிவிப்பு தோன்றுகிறது. மிகக் குறைந்த மெமரி அளவில் போன் பயன்படுத்தப்படும்போது, ஹேங் ஆவது, புதிய கோப்புகளை டவுன்லோட் செய்யமுடியாத சூழல் ஆகிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இதிலிருந்து விடுபட போன் மெமரியை குறிப்பிட்ட அளவு காலியாக இருக்கும்படியாக பராமரிக்கவேண்டும். அதற்கான சில டிப்ஸ்களை இப்போது பார்ப்போம்.

டேட்டாவை பேக்கப் செய்தல்: மொபைலின் இன்டெர்னல் மெமரியில் உள்ள அப்ளிகேஷன்கள், வீடியோக்கள், படங்கள் ஆகியவற்றை மெமரி கார்டுக்கு நகர்த்தவேண்டும். பொதுவாக இது எல்லோருக்கும் தெரிந்த வழிதான். இருந்தாலும் இதனை சரியாக நேரம் ஒதுக்கி செய்யவேண்டும். வாட்ஸ்அப், ஃபேஸ்புக் போன்ற ஆப்களிலிருந்து பதிவிறக்கம் செய்யப்படும் படங்கள், வீடியோக்கள் நேரடியாக மெமரி கார்டுக்கு செல்லும்படியாக செட்டிங் அமைத்துக் கொள்வது இன்னும் கூடுதல் பலன்தரும். மெமரி கார்டின் அளவு உங்கள் தேவைக்கேற்பவும், ஃபோன் அதிகபட்சமாக சப்போர்ட் செய்யும் மெமரி திறனையும் அறிந்து வாங்கிப் பயன்படுத்தவும். class 10 வகை தரமான மெமரி கார்டுகள் டேட்டாவை வேகமாக பரிமாறிக் கொள்ள உதவும். ஆப்களை மெமரி கார்டில் பதிந்து இயக்குவதற்கு இந்த வகை கார்டுகளே சிறந்தவை. மெமரி பரிமாற்ற வேகம் குறைவாக இருந்தால் ஃபோனின் செயல்பாடு மந்தமாக இருக்கும்.

இயல்பாகவே உங்களுடைய ஆண்ட்ராய்ட் போனில் உள்ள ஒரு சில அப்ளிகேஷன்களை மெமரிகார்ட்டுக்கு நகர்த்த முடியாது. என்றாலும் மற்ற அப்ளிகேஷன்களை ஆண்ட்ராய்ட் போனிலிருந்து மெமரிகார்ட்டுக்கு மாற்ற முடியும். இதனை செயல்படுத்த பல ஆப்ஸ்கள் உள்ளன. அதில் ஒன்று ஆப்ஸ்2எஸ்டி (AppMgr III App 2 SD). இம்மென்பொருள் முக்கியமாக இரண்டு வழிமுறைகளில் உங்களுக்கு பயன்படும். நீங்கள் ஏற்கெனவே பயன்படுத்திக்கொண்டிருக்கும் ஆப்சை உங்களுடைய மெமரிகார்ட்டுக்கு (Memory Card)எளிதாக நகர்த்த முடியும். இதற்கு அந்த அப்ளிகேஷனில் உள்ள மூவபிள் ஆப்சன் பயன்படும். அந்த ஆப்சனைப் பயன்படுத்தும்பொழுது, ஆண்ராய்ட் போனில் உள்ள அப்ளிகேஷன்களில் எந்தெந்த அப்ளிகேஷன்களை மெமரி கார்ட்டுக்கு நகர்த்த முடியும் என்பதைக் காட்டும். நீங்கள் உங்கள் மெமரிகார்ட்டுக்கு நகர்த்த வேண்டிய மென்பொருளை தேர்வு செய்து Move செய்துவிடலாம். இரண்டாவதாக, போன் மெமரியில் உள்ள கேச்சிகளை அகற்றும் வேலையையும் இந்த ஆப் செய்துவிடுகிறது.

தற்காலிக கோப்புகளை அழித்தல்: போனில் எந்த ஒரு ஆப்சை திறந்தாலும் அதன் செயல்பாட்டிற்கு ஏற்ப கேச்சி ஃபைல் (Phone Memory Cache) எனப்படும் தற்காலிக கோப்புகள் பின்புலத்தில் உருவாக்கப்படும். இவை ஃபோனின் உள் மெமரியை எடுத்துக் கொள்கின்றன. அந்த ஆப்ஸ் செயல்பாட்டில் இருக்கும் வரை மட்டுமே அதன் தேவை இருக்கும். அதன் பிறகு அது குப்பையாகவே கருதப்படும். மீண்டும் அந்த மென்பொருளைப் பயன்படுத்தும்போது அந்தக் குறிப்பிட்ட வேலையை அல்லது பக்கத்தைப் பார்க்கும்போது மட்டுமே இந்தத் தற்காலிகத் தகவல் (application data) தேவைப்படலாம். மற்றபடி அவை போனின் மெமரியை பாதிக்கக்கூடியதே. எனவே, அவ்வப்போது போனின் செட்டிங்ஸ்>ஸ்டோரேசஜ் சென்று கேச்சி ஃபைல் அளவை அறிந்து ஒரு கிளிக் செய்தால் நீக்கப்பட்டு விடும். அல்லது ஆப்ஸ் மெனுவில் சென்று நாம் அதிகம் பயன்படுத்தும் ஆப்ஸ்களை தேர்வு செய்து பார்த்து கேச்சிகளை நீக்கலாம்.

தேவையற்ற ஆப்ஸை நீக்கவும்: ஒரே வேலைக்கு இரண்டு, மூன்று ஆப்ஸ் வைத்து கொள்வது, எப்போதாவது ஒருமுறை பயன்படுத்தும் ஆப்ஸ்களை நிரந்தரமாக வைத்திருப்பதும் தேவையற்றதாகும். ஆப்ஸை பேக்கப் செய்து மெமரிகார்டில் பதிந்து வைத்துக் கொள்ளவும். தேவைப்படும் பட்சத்தில் இன்ஸ்டால் செய்து கொள்ளலாம். வேலை முடிந்ததும் அன்இன்ஸ்டால் செய்துவிடவும். தேவையற்ற ஆப்சை செயழிக்க செய்தல் மொபைல் போன் தயாரிப்பு நிறுவனங்கள், தங்களுடைய ஆப்ஸ் தொகுப்புகளுடன் வேறு சில ஆப்ஸ்களை வர்த்தக ரீதியில் ஒப்பந்தம் மேற்கொண்டு பதிந்தே தருகின்றன. இத்தொகுப்புகளை preinstalled apps அல்லது bloatware packing என்கிறார்கள். இந்த ஆப்களில் பல நாம் ஒருமுறைகூட பயன்படுத்தப் போவதில்லை. வேண்டாம் என்று அவற்றை போனிலிருந்து நீக்கவும் முடியாது. போனின் மெமரியை தேவையில்லாமல் எடுத்துக் கொள்ளும் இவற்றை நீக்க முடியாவிட்டாலும் முடக்கி வைக்கலாம். இதற்கு முதலில் போனில் settings பிரிவு செல்லவும். இங்கு உள்ள Apps என்ற பிரிவிற்கு அடுத்து செல்லவும். தொடர்ந்து வலது புறமாக ஸ்வைப் செய்து சென்று, அந்த வரிசையில் “All” என்பதனைக் காணவும். இங்கு நமக்குத் தேவையில்லாத அப்ளிகேஷன்களைத் தேர்ந்தெடுத்து Disable என்ற பட்டனை அழுத்தவும். இந்த வகை ஆப்ஸ்கள் அப்டேட் ஆகாமலும் பார்த்துக் கொள்ளவும்.

Leave A Reply

%d bloggers like this: