தேசிய அளவில் 71வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், புற்றுநோயில் இருந்து விடுதலை ( ப்ரீடம் ஃபிரம் கேன்ஸர் ரிலீஃப் அண்டு ரிசர்ச் ஃபவுண்டேஷன்) அறக்கட்டளை சார்பில் சென்னையில் புற்றுநோய்க்குப் பிந்தைய வாழ்வை கொண்டாடும் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த இந்நிகழ்வில், குழந்தைகள் உட்பட, 300 புற்றுநோயில் பிழைத்தவர்கள் பங்கேற்று ஆடல் பாடல் நிகழ்ச்சிகளை நடத்தினர்.  அறக்கட்டளையின்  தலைமை செயல் அலுவலர் பேராசிரியர் டாக்டர்.அனிதா ரமேஷ் இந்த நிகழ்ச்சியில் பேசுகையில்,  “தேசம் முழுவதும் பல வழிகளில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், புற்றுநோயிலிருந்து மீண்டதன் வழியாக உடல்  மற்றும் மன ரீதியிலான சுதந்திரம் பெற்றவர்கள் இங்கு ஒருங்கிணைந்து தங்களது கதைகளை பகிர்ந்துகொண்டனர் என்றார்.  ஆதரவு மற்றும் ஒத்துழைப்பு வாயிலாக புற்றுநோயில் இருந்து விரைந்து விடுதலை பெறமுடியும் என்றும் அவர் கூறினார்.
“முன்கூட்டியே கண்டறிவது மிகவும் முக்கியமாகும். 40 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் மார்பகப் புற்றுநோய் மற்றும் கருப்பை புற்றுநோய் தொடர்பான சோதனைகளையும் மற்றும் 50 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் பெருங்குடல் புற்றுநோய் மற்றும் பிராஸ்டேட் புற்றுநோய் தொடர்பான சோதனைகளையும் கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

Leave A Reply

%d bloggers like this: