இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜூன் சம்பத், கடந்த ஞாயிற்றுக்கிழமை பத்திரிகைகளுக்கு பேட்டியளித்தார். அதில், விநாயகர் சதுர்த்தியையொட்டி செப்டம்பர் 3 ஆம் தேதி இந்து மக்கள் கட்சியின் சார்பில் ஐஸ்ஹவுஸ் மசூதி வழியாக தடையை மீறி விநாயகர் ஊர்வலம் நடத்தப்படும் எனத் தெரிவித்திருந்தார்.
தடையை மீறி இங்கு ஊர்வலம் நடத்தினால் பதற்றமும், பொது அமைதிக்கு குந்தகமும் ஏற்படும் என சென்னை காவல்துறை கருதியது. இதையடுத்து ஐஸ்ஹவுஸ் காவல் துறையினர் அர்ஜூன் சம்பத் மீது வழக்குப் பதிவு செய்தனர். மேலும் அர்ஜூன் சம்பத் மீது நன்னடத்தை பிணை பெறுவதற்குரிய முயற்சியில் ஐஸ்ஹவுஸ் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Leave A Reply