இபிஎஸ்சுக்கு பெரும்பான்மை இல்லை

சட்டமன்றத்தில் மொத்த எம் எல்ஏக்கள் 234. இதில் ஜெ மரணத்தால் ஒரு இடம் காலி. மீதி 233. பெரும்பான்மை என்பதற்கு 117 வேண்டும். அதிமுகவின் பலம் 132 . இதில் 19 பேர் தாங்கள் இபிஎஸ்சை ஆதரிக்கவில்லை என்று ஆளுநரிடம் மனு கொடுத்து விட்டார்கள். ஆக இபிஎஸ்சின் சொந்த பலம் 113 தான். இதில் ஒருவர் சபாநாயகர்! தோழமைக் கட்சிகள் மூவரின் ஆதரவு இருப்பதாகத் தெரியவில்லை. அப்படியே இருந்தாலும் பெரும்பான்மை இல்லை. நியாயவான் என்றால் முதல்வர் பதவியை உடன் ராஜினாமா செய்ய வேண்டும். அவ்வளவு நியாயவான் இல்லையென்றால் குறைந்தபட்சம் சட்டமன்றத்தை உடன் கூட்டி தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். அம்மா பாணியில் கேட்டால் செய்வீர்களா..செய்வீர்களா..செய்வீர்களா?

Ramalingam Kathiresan

Leave A Reply

%d bloggers like this: