கோவை, ஆக.21- பாகிஸ்தான் சிறையில் இருந்து இந்திய வீரர்கள் தப்பிய சம்பவம் தி கிரேட் இந்தியன் எஸ்கேப் திரைப்படம்- ஆக்.8யில் வெளியிடப்பட உள்ளதாக அப்படக்குழுவினர் தெரிவித்தனர். இதுதொடர்பாக, கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள இந்திய விமானப்படை அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தி கிரேட் இந்தியன் எஸ்கேப் படத்தின் இயக்குநர் தரன்ஜித் சிங் நம்தாரி கூறியதாவது:- கடந்த 1971 ல் இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நடந்துக் கொண்டிருந்தது. அப்போது, இந்திய விமானப்படை அதிகாரிகளான திலிப் பருல்கார், க்ரூவல், ஹரிஷ் சிஞ்சி ஆகியோர் 3 பேர் பாகிஸ்தான் சிறையில் கைதிகளாக இருந்தனர். இந்த மூவரும் பாகிஸ்தான் சிறையில் இருந்து தப்பித்து இந்தியா திரும்பி வந்தனர்.

இந்த உண்மை சம்பவத்தைஅடிப்படையாக கொண்டு தி கிரேட் இந்தியன் எஸ்கேப் எனும் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படம் இந்திய விமானப்படை தினமான அக்டோபர் 8ல் நாடு முழுவதும் வெளியாகிறது. கடந்தாண்டு ஜூலையில் துவங்கிய பட வேலைகள் ஓராண்டில் முடிவடைந்தது. ஆனால், 3 ஆண்டுகளுக்கு மேல் படத்திற்கான ஆய்விற்கும், இந்திய எல்லைகள், பாகிஸ்தான் சிறை போன்ற பல்வேறு அம்சங்களை உண்மையாக பிரதிபலிக்க வேண்டி பஞ்சாப், மும்பை போன்ற மாநிலங்களில் வடிவமைத்து படம் சூட்டிங் நடத்தப்பட்டது. உண்மை சம்பவத்தைமையமாக கொண்டு எடுக்கப்படும் படங்களுக்கு ரசிகர்களிடைய எப்போதும் வரவேற்பு இருக்கும்.

அதே போன்று இந்த படமும் ரசிகர்களிடையே பெரும் தாக்கத்தையும் ஏற்படுத்தும். முக்கியமாக விமான அதிகாரிகளின் நிலையையும் அறிந்துக்கொள்ளவும் முடியும். ஹிந்தி மொழியில் எடுக்கப்பட்ட இப்படம் தமிழ், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார். இந்த சந்திப்பின்போது திரைப்பட நடிகர்கள் ராகவ் ரிஷி, ராஜ்சிங் அரோரா ஆகியோர் உடனிருந்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.