ஈரோடு, ஆக. 21- ஈரோடு மாவட்டம் அடுத்த பெருமாள்மலையில் உள்ள பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டித்தர வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் மற்றும் பள்ளி மேலாண்மை குழுவினர் மாவட்ட ஆட்சியர் பிரபாகரிடம் மனு அளித்தனர். இம்மனுயில் கூறியிருப்பதாவது:- பெருமாள்மலை கிராமத்தில், 675 குடும்பத்தை சேர்ந்த, ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள யூனியன் நடுநிலைப்பள்ளியில், 203 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, 5 வகுப்பறை கட்டடம் மட்டுமே உள்ளது. ஒரு வகுப்பறையில், இரண்டு வகுப்புகள் நடத்தும் நிலை உள்ளது.

மேலும், ஒரே வகுப்பில் 60க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் அமர்ந்து கல்வி கற்கும் சூழல் உள்ளது. இதனால், ஆசிரியர்களும், மாணவ, மாணவியரும் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர்.எனவே, ஈரோடு மாநகராட்சி வளர்ச்சி திட்டத்தின் கீழ், கூடுதலாக 3 வகுப்பறை கட்டடம் கட்ட மாவட்ட நிர்வாகம் பரிந்துரை செய்திட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: