கோவை, ஆக. 21- கோவையில் தனியார் மருத்துவமனையின் தவறான சிகிச்சையால் ஒருவர் உயிரிழந்தது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி நாடாளுமன்ற உறுப்பினர் கோவை மாநகர காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த கணபதி என்பவரின் மகன் ரவிச்சந்திரன் (52). இவர் ஞாயிரன்று மாலை கோவை திருச்சி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தோல்பட்டையில் ஏற்பட்ட வலியின் காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து திங்களன்று காலை 9.30 மணியளவில் அவரை அறுவை சிகிச்சை அரங்கிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு, அறுவை சிகிச்சைக்கு முன்பு ரவிச்சந்திரனுக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டுள்ளது. அப்பொழுது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்தார். மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் தான் ரவிச்சந்திரன் உயிரிழந்தாகக் கூறி அவரது உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், உயிரிழந்த ரவிச்சந்திரன், நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் பி.ஆர்.சுந்தரத்தின் அண்ணன் மகனாவர். இவர் உயிரிழந்தது தொடர்பான தகவல் அறிந்து கோவை வந்த பி.ஆர்.சுந்தரம், மருத்துவமனையின் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி கோவை மாநகர காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.